வெள்ளித்திரைக்கு இணையாக தற்போது சின்னத்திரையிலும் ரசிகர்களின் பட்டாளம் இருந்து வருகிறது. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் எதிர்நீச்சல் சீரியல் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தை இருவருக்கும் கொண்ட கதை. மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன் தம்பி வாழுகிறார்கள். இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்களை எல்லாம் வீட்டு வேலை செய்யும் பெண்களாக கருதி வருகிறார்கள். அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று அதிகம் செய்து வந்து அவர்களை வீட்டு வேலை செய்ய வைக்கிறார்கள். அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல் அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள். இப்படி ஒரு நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார். இவள் நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். ஆனால் அவராலும் எதுவும் செய்ய முடிவதில்லை.
விறுவிறுப்பான திருப்பு முனைகள் :
இந்த நிலையில் தொடக்கத்தில் இருந்து பேசாமல் இருந்த பட்டம்மாள் பேச தொடங்கியதும் ரசிகர்களினாலேயே கணிக்க முடியாத பல திருப்பு முனைகள் இந்த சீரியலில் நடந்து வருகிறது. குறிப்பாக சில வருடங்களுக்கு முன்னர் தான் இவர் தன்னுடைய பெயர் பட்டம்மாள் எம்.எ என்று இந்த வீட்டில் தனக்கு 40 சதவீதம் பங்கு இருக்கிறது என்று வீட்டில் உள்ள அனைவரையும் அதிர வைத்தார். அதற்க்கு பிறகு திடீரென கானால் போய் மீதும் வந்துள்ளார். ஆனால் இதனை நாள் எங்கிருந்தார் என்பது பலரும் அறியாத ஓன்று.
டிஆர்பியில் முன்னிலை :
இப்படி இந்த எதிர்நீச்சல் சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்க கிட்டத்தட்ட 275 எபிசொடுகளை கடந்துள்ள நிலையில் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து சன் டிவியில் டிஆர்பியில் முன்னிலை வகித்து வருகிறது. இந்த சீரியலில் அதிகமாக புதிய கதாபாத்திரங்கள் இருந்தாலும் அவை அனைத்தும் அறிந்த கதாபாத்திரம் என்பதும் இந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஓன்று. ஆனால் இப்படியுள்ள சீரியல் தான் தற்போது மிகப்பெரிய குளறுபடியில் சிக்கியுள்ளது.
கலாய்க்கும் நெட்டிசன்கள் :
அதவது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலில் ஏற்கனவே மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஒருவர் தற்போது மீண்டும் தர்ஷனுடய கல்லூரி உயர் ஆசிரியையாக வந்துள்ளார். இதனை அறிந்த ரசிகர்கள் நாங்கள் இந்த சீரியலை ஆஹா ஒஹோ என்று கூறிக்கொண்டிருக்க இப்படி ஒரே நபரை இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து விடீர்களே என்று புகைப்படங்களை ஒன்றாக பகிர்ந்து கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.