சின்னத்திரை தொடர்களுக்கான விருது விழாவில் இயக்குனர் திருச்செல்வம் பேசியிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சின்னத்திரை உலகிலேயே முதல் முறையாக அனைத்து தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் சிறப்பாக செயல்பட்டிருந்த கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் சின்னத்திரை விருதுகள் 2023 என்ற விருது விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதில் சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் பலருமே கலந்துகொண்டு இருந்தார்கள். மேலும், இந்த விழாவில் சிறந்த தொலைக்காட்சி தொடருக்கான விருதை சன் டிவியின் 'எதிர்நீச்சல்' சீரியல் பெற்றது, மேடையில் விருதை வாங்கிய பிறகு எதிர்நீச்சல் சீரியல் இயக்குனர் திருச்செல்வம், எல்லோருடைய வாழ்க்கையில் இருந்து எடுக்கப்பட்ட கதை தான் எதிர்நீச்சல். இந்த சீரியல் இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்ததற்கு சன் தொலைக்காட்சி, சன் குழுமம் தலைவர் கலாநிதி மாறன், காவேரி மேடம் ஆகியோருக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
விருது வாங்கிய திருச்செல்வம்:
'கோலங்கள்' தொடருக்குப் பிறகு எனக்கு வாய்ப்பையும், முழு சுதந்திரத்தையும் அளித்ததால் தான் இந்த சீரியலில் இவ்வளவு பெரிய வெற்றியை பெற்று இந்த விருதை என்னால் வாங்க முடிந்தது. இதை நான் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். இந்த விருது எனக்கு சிறந்த தயாரிப்பாளர்களுக்காக கிடைத்தது. நான் ஒரு நல்ல தயாரிப்பாளரா என்று எனக்கு தெரியாது. காரணம், நான் ஒருபோதும் தயாரிப்பை பற்றி யோசித்ததே கிடையாது.

திருச்செல்வம் சொன்னது:
கதை கேட்பேன், படிப்பேன், யோசிப்பேன் அது மட்டும் தான் என்னுடைய நோக்கமாக இருந்தது. இந்த தொடர் இவ்வளவு பெரிய இடத்தை பிடித்திருக்கிறது என்றால் அதற்கு காரணம் வசனம் எழுதி கொடுத்த ஸ்ரீவித்யா தான். எல்லாவற்றிற்குமே அவர்கள் எனக்கு சப்போர்ட்டாக இருந்தார்கள். அதோடு பலருமே ஏன் சீரியலை இவ்வளவு சீக்கிரமாக முடித்து விட்டீர்கள்? என்று போன் பண்ணி கேட்டு இருந்தார்கள். இந்த மாதிரியான தருணங்களை நான் இதற்கு முன்பு எந்த தொடரிலும் அனுபவித்ததில்லை.
https://www.youtube.com/watch?v=l-XAvakGkZs
எதிர்நீச்சல் குறித்து சொன்னது:
மேலும், எதிர்நீச்சல் சீரியல் 800 எபிசோடுகள் தான் ஒளிபரப்பாகி இருந்தது. அப்போதே 1000, 2000 எபிசோடுகள் போயிருக்கலாமே என்று கேட்பார்கள். எண்ணிக்கை எல்லாம் பெரிதல்ல. மக்கள் எண்ணங்களில் எந்த அளவிற்கு இடம் பிடித்திருப்பது என்பதுதான் முக்கியம். இன்னுமே அந்த தொடரின் கதாபாத்திரங்களில் இருந்து நாங்கள் யாரும் வெளிவர முடியவில்லை. இந்த விருதை எனக்கு ஜீ தமிழும் விஜய் டிவியும் சேர்ந்து சன் டிவிக்கு கொடுத்தது போல இருக்கிறது.

திருச்செல்வம் குறித்து சொன்னது:
அப்போது எதிர்நீச்சல் 2 வருமா? என்று தொகுப்பாளர் அர்ச்சனா கேட்டதற்கு, எதிர்நீச்சல் எப்பொழுதும் வரும், எப்பொழுதும் இருக்கும் என்று கூறி இருந்தார். தற்போது இவர் பேசியிருக்கும் வீடியோ தான் இணையத்தில் வைரலாகப்பட்டு வருகிறது. சின்னத்திரை சீரியல் இயக்குனர்களில் மிகவும் பிரபலமான இயக்குனராக திகழ்பவர் திருச்செல்வம். இவர் முதன் முதலாக 2002 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த 'மெட்டி ஒலி' என்ற தொடரில் இணை இயக்குனராக பணியாற்றி இருந்தார். அதற்கு பிறகு கோலங்கள் என்ற தொடரை இயக்கி சின்னத்திரை இயக்குனராக மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார் திருச்செல்வம். பின் இவர் எதிர்நீச்சல் என்ற சீரியலை இயக்கி இருந்தார்.






