குணசேகரன் ரோலில் நடிக்க வேல ராமமூர்த்திக்கு கொடுக்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

0
464
- Advertisement -

எதிர்நீச்சல் சீரியலில் வேலராமமூர்த்தி வாங்கும் சம்பளம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் பட்டிதொட்டி எங்கும் பேமஸ் என்றால் அது எதிர்நீச்சல் தான். வாரம் வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் எதிர்நீச்சல் சீரியல் தான் உச்சத்தில் இருக்கிறது. இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணமே ஆதி குணசேகரன் கதாபாத்திரம் தான். இந்த கதாபாத்திரத்தில் முதலில் நடித்திருந்தவர் மாரிமுத்து. இவருக்காகவே இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அதுமட்டுமில்லாமல் இவரைப் பார்க்கவே இந்த சீரியலையும் எக்கச்சக்கமான ரசிகர்கள் பார்க்கிறார்கள். இப்படி ஒரு நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் மாரிமுத்து மாரடைப்பால் இறந்து விட்டார்.

- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல்:

இது பிரபலங்களுக்கு மட்டும் இல்லாமல் எதிர்நீச்சல் ரசிகர்களுக்கும் வேதனை அளித்து இருந்தது. இதனை அடுத்து யார் அடுத்த குணசேகரன்? என்று ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. பின் இந்த சீரியலில் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் வேல ராமமூர்த்தி என்ட்ரி கொடுத்திருக்கிறார். வேல ராமமூர்த்தி தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். பெரும்பாலும் இவர் படங்களில் குணச்சித்திர, வில்லன் வேடங்களில் தான் நடித்துக் கொண்டு வருகிறார்.

எதிர்நீச்சல் சீரியலில் வேல ராமமூர்த்தி:

மேலும், எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க முதலில் வேல ராமமூர்த்தி தயங்கினார். அதற்குப்பின் சேனல் தரப்பில் பேசி அவரை நடிக்க வைத்தார்கள். அதுமட்டுமில்லாமல் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க வரும் முன் அவர் ஐந்து படங்களில் கமிட் ஆகி இருந்தார் .கடைசியாக இவர் ரெய்டு என்ற படத்தில் நடித்திருந்தார். இருந்தும் இவர் எதிர்நீச்சல் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் இவர் அடிக்கடி படங்களிலும் சென்று நடித்துக் கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

எதிர்நீச்சல் சீரியல் சம்பளம்:

இருந்தாலும் இவருக்கு படங்களில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சம்பளம் எல்லாம் அதிகம் வரவில்லை.
இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் வேலராமமூர்த்தி வாங்கும் சம்பளம் குறித்த தகவல் தான் வெளியாகி இருக்கிறது. அதாவது இவர் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்க மாதம் 10 லட்சத்திலிருந்து 15 லட்சம் வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. தற்போது இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பலருமே அதிருப்தி அடைந்து விட்டார்கள்.

சீரியல் ட்ராக்:

தற்போது சீரியலில் அப்பத்தா இறந்த பிறகு வீட்டு பெண்கள் தங்களுடைய கேரியரில் சாதிக்க முயற்சிக்கிறார்கள். அந்த வகையில் ஈஸ்வரி தேர்தலில் நிற்க முடிவெடுக்கிறார். இன்னொரு பக்கம் அப்பத்தாவின் இறப்பு குறித்து சக்தி- ஜனனி இருவரும் குணசேகரன் இடம் விசாரணை நடத்த வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். இதனால் குணசேகரன் கடும் கோபத்தில் இருக்கிறார். இனிவரும் நாட்களில் ஈஸ்வரி தேர்தலில் வெற்றி பெறுவாரா? ஜீவானந்தம் விடுதலையாகுவாரா? குணசேகரன் முகத்திரை கிழியுமா? அப்பத்தா இறப்புக்கு காரணம் யார்? போன்ற பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

Advertisement