சீரியலில் முருட்டுத்தனமான அப்பா, நிஜத்தில் கனிவான தந்தை – எதிர் நீச்சல் மாரிமுத்துவின் மகன் மற்றும் மகளை பார்த்துளீர்களா ?

0
1051
marimuthu
- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல் குணசேகரனின் ஆரம்ப கால வாழ்க்கை குறித்த சுவாரசியமான தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் எதிர்நீச்சல் சீரியல் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தை மையமாகக் கொண்ட கதை. மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன் தம்பி வாழுகிறார்கள். இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

-விளம்பரம்-

அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்களை எல்லாம் வீட்டு வேலை செய்யும் பெண்களாக கருதி வருகிறார்கள். அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்து வந்து அவர்களை வீட்டு வேலை செய்ய வைக்கிறார்கள். அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல் அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள். இப்படி ஒரு நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார். இவள் நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார்.

- Advertisement -

எதிர்நிச்சல் சீரியல்:

இருந்தாலும் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. தற்போது சீரியலில் குணசேகரின் மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது. ஆனால், இந்த விழாவில் கலந்து கொள்ள கூடாது என்று குணசேகரனும் அவருடைய தம்பிகளும் முடிவு எடுக்கிறார்கள். எல்லாத்தையும் எதிர்த்து குணசேகரன் வீட்டில் உள்ள பெண்கள் இந்த விழாவை சிறப்பாக நடத்துகின்றனர். இதனால் குணசேகரன் என்ன செய்யப் போகிறார்? என்ற ஆவனுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் குணசேகரின் ஆரம்பகால வாழ்க்கை குறித்த தகவல் வைரலாகி வருகிறது.

மாரிமுத்து குறித்த தகவல்:

சீரியலில் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் மாரிமுத்து. இவர் எதிர்நீச்சல் சீரியலில் வில்லனாக மிரட்டி வருகிறார். ஆனால், இதற்கு முன்பே இவர் வெள்ளி திரையில் பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் சின்னத்திரை, வெள்ளி திரையில் கொடி கட்டி பறந்தாலும் இவருடைய ஆரம்ப கால வாழ்க்கை பல கஷ்டங்களை கடந்து இருக்கிறது. தேனியில் அருகில் உள்ள 20 வீடுகள் மட்டும் இருக்கும் ஒரு சாதாரண பசுமலைத்தேறி என்ற கிராமத்தில் பிறந்தவர் மாரிமுத்து. இந்த கிராமத்தில் அதிகமாக யாருமே படிக்கவில்லை.

-விளம்பரம்-

மாரிமுத்து குடும்பநிலை:

பள்ளிகள் எதுவும் கிடையாது, வீட்டில் கஷ்டம் இருந்தாலும் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடக்கூடாது என்று இவருடைய ஊரில் இருந்து பல மைல் தூரம் சென்று கல்லூரி படிப்பை முடித்து இருக்கிறார் மாரிமுத்து. கல்லூரி படிக்கும் போது இவர் விருதுநகரில் முதன் முதலாக முதல் மரியாதை திரைப்படத்தை பார்த்திருக்கிறார். இந்த படத்தை பார்த்தவுடன் இவருக்கு மிகவும் பிடித்து விட்டது. அதற்கு பின் தான் இவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியிருந்தது. பல போராட்டங்களுக்குப் பிறகு இவர் கல்லூரி படிப்பை முடித்து சினிமாவில் சேர வேண்டும் என்று சென்னைக்கு வந்தார்.

மாரிமுத்து திரைப்பயணம்:

ஆரம்பத்தில் இவர் உதவி இயக்குனராக பல திரைப்படங்களில் பணியாற்றி இருக்கிறார். பின் கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற இரண்டு படங்களை இவர் இயக்கியும் இருக்கிறார். மேலும், இவர் யுத்தம் செய் என்ற படத்தின் மூலம் தான் முதன் முறையாக நடிகராக அறிமுகம் ஆகியிருந்தார். அதற்குப் பிறகு இவர் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேதங்களில் நடித்திருக்கிறார். தற்போது எதிர்நீச்சல் சீரியலில் வில்லனாக மிரட்டி இருக்கிறார். இப்படி குடும்ப சூழ்நிலை, வறுமையின் கொடுமை, கடின உழைப்பு என்று பல போராட்டங்களுக்கு பிறகு தான் மாரிமுத்து தற்போது இந்த நிலைமையில் இருக்கிறார்.

Advertisement