ரசிகர்கள் எதிர்பார்த்த ‘எதிர்நீச்சல் 2’ சீரியல் தொடங்க இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருந்த சீரியலில் ஒன்று எதிர்நீச்சல். இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து முடியும் வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று இருந்தது.
மேலும், இந்த சீரியல் அடக்கு முறைக்கு உட்படும் பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருந்தது. அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும், பெண்களுக்கான உரிமையையும் மையமாக கொண்ட கதை தான் எதிர்நீச்சல். மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன்- தம்பிகள் வாழ்வார்கள். இவர்கள் இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டிருப்பார்கள். அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்களை எல்லாம் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்களாக நடத்துவார்கள்.
எதிர்நீச்சல் சீரியல்:
அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்து இருப்பார்கள். அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல் அந்த பெண்களும் அமைதியாக இருப்பார்கள் இப்படி இருக்கும் நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருவார். இவர் அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்க, வீட்டில் பல பிரச்சனைகள்நடக்கும். இதனால் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுவார்கள்.
சீரியலின் கதை:
இறுதியில் அந்த பெண்களின் நிலைமை என்ன? அவர்கள் வாழ்க்கையில் சாதித்தார்களா? ஆண் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டதா? என்று சீரியல் விறுவிறுப்பாக சென்று இருந்தது. மேலும், சில மாதங்களுக்கு முன்பு தான் இந்த சீரியலை திடீரென சீரியல் குழுவினர் முடித்து விட்டார்கள். இது எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்திருந்தது. கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த சீரியல் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஒளிபரப்பப்பட்டது.
எதிர்நீச்சல் 2 :
மேலும், இந்த சீரியல் முடிந்தவுடன் இதன் இரண்டாம் பாகம் வரும் என கூறப்பட்டது. ஆனால், நீண்ட நாட்களாக சேனல் தரப்பில் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. தற்போது ‘எதிர்ச்சல் 2 ‘ குறித்தான ஒரு சூப்பர் அப்டேட் தான் சேனல் தரப்பில் இருந்து வெளியாகியுள்ளது. அதாவது ‘எதிர்நீச்சல் 2’ தொடரின் பிரமோ தான் சேனல் வெளியிட்டு இருக்கிறது. இந்தத் தொடர் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக ஒளிபரப்பாக உள்ளது.
எதிர்நீச்சல் 2 குறித்து:
இயக்குனர் திருச்செல்வம் இயக்கத்தில் வெளியான இந்த சீரியலின் முதல் பாகத்தில் நடித்த மாரிமுத்து அவர்கள் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்திற்கு பயங்கர பேமஸ். அவரின் மறைவுக்குப் பிறகு வேல ராமமூர்த்தி அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், ஜனனி, ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி போன்ற முன்னணி நான்கு கதாபாத்திரங்களை வைத்து இந்த இரண்டாம் பாகத்தின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதில் ஜனனிகதாபாத்திரத்தில் நடித்த மதுமிதா சமீபத்தில் தான் ‘எதிர்நீச்சல் 2’ சீரியலில் நடிக்கப் போவதில்லை என்று விலகி இருந்தார். தற்போது ஜனனி கதாபாத்திரத்திறால் மதுமிதாவுக்குப் பதிலாக பார்வதி நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளாராம்.