அது அப்பாவின் நம்பர் தான். ஆனால் – ட்விட்டர் கமெண்டால் கேலிக்கு உள்ளான மாரிமுத்து. மகன் விளக்கம்.

0
1732
marimuthu
- Advertisement -

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் எதிர்நீச்சல் சீரியல் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தை மையமாகக் கொண்ட கதை. மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன் தம்பி வாழுகிறார்கள். இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்களை எல்லாம் வீட்டு வேலை செய்யும் பெண்களாக கருதி வருகிறார்கள். அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று அதிகம் செய்து அதிகம் அவர்களை வீட்டு வேலை செய்ய வைக்கிறார்கள்.

-விளம்பரம்-

அனால், அவர்களை எதிர்த்து அந்த பெண்கள் எப்படி போராடுகிறார்கல் என்பதே இந்த சீரியலின் கதை. இந்த குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வில்லனாக மிரட்டி வருபவர் நடிகர் மாரிமுத்து. இந்த சீரியலில் நடிக்கும் கதாநாயகி மற்றும் கதாநாயகனை காட்டிலும் அதிகமான ரசிகர்கள் இவருக்கு உள்ளனர். அதிலும் இவர் தன்னுடைய தம்பிகளை கூடவே இருக்க வேண்டும் என்ற பாசத்தினால்தான் இப்படி நடந்து கொள்கிறார் என்று ரசிகர்கள் இவருக்கு ஆதரவு கூறி வருகின்றனர்.

- Advertisement -

இவர் இதற்கு முன்பே வெள்ளி திரையில் பல படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், இவருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் உருவாகி இருப்பது எதிர் நீச்சல் தொடர் மூலம் தான். தான் “எதிர் நீச்சல்” சீரியலில் வில்லனாக நடிப்பதினால் சீரியலை விட்டு வெளியில் நிஜ வாழ்கையிலும் அதோ போல என்னை பார்த்தால் திட்டுகின்றனர். வெளியில் சென்றால் கூட என்னுடைய எதிரில் வந்தால் இந்த வழி வேண்டாம் என்று வேறு வழியில் சென்று விடுகின்றனர்.

அதனை பாரத்தால் எனக்கு சிரிப்புதான் வருகிறது. மேலும் அது என்னுடைய நடிப்பிற்கு கிடைத்த அங்கீகாரமாக நான் எண்ணுகிறேன் என்று கூறி இருந்தார். கடந்த சில நாட்களாக ‘இந்தாம் ஏய்’ என்ற மாரிமுத்துவின் Templeteகள் பல வைரலானது. இதன் மூலம் சமூக வலைத்தளத்திலும் trending மீம் மெட்டிரியலானார் மாரிமுத்து. இப்படி ஒரு ஒரு நிலையில் இவர் சமூக வளைத்ததில் கேலிக்கு உள்ளாகி வருகிறார்.

-விளம்பரம்-

கடந்த சில நாட்களுக்கு முன்னர் 18+ ட்விட்டர் பக்கம் ஒன்றில் அழகான பெண்ணின் புகைப்படம் ஒன்று போட்டு ‘can i call you’ என்று குறிப்பிடபிபட்டு இருந்தது. இந்த பதிவிற்கு கீழ் மாரிமுத்து என்ற ட்விட்டர் கணக்கில் இருந்து Yes என்று பதிவிட்டு ஒரு போன் நம்பரும் போடப்பட்டு இருந்தது. இந்த பதிவை பார்த்த பலரும் சீரியலில் மட்டும் ஸ்ட்ரிக்ட்டான நபராக இருந்துவிட்டு இப்படி ட்விட்டரில் வழிந்துகொண்டு இருக்கிறார் என்று பலரும் கேலி செய்து வருகின்றனர்.

மேலும், இது மாரிமுத்துவின் போன் நம்பர் தான் என்றும் true callerல் இந்த நம்பரை போட்டு ஆதாரத்தை எல்லாம் போட்டு கலாய்த்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள மாரிமுத்து மகன் அகிலன் ‘அந்தப் பதிவில் கமெண்ட் செய்திருப்பது எனது தந்தையின் அக்கவுண்ட் கிடையாது அவரின் போன் நம்பர் பெரும்பாலானோருக்கு தெரியும் அதனால் அதனை யாரோ தவறாக பயன்படுத்தி இருக்கின்றனர்’ என்றும் கூறி உள்ளார்.

Advertisement