பிரம்மாண்டமான திருமண மண்டபத்தை கட்டி இருக்கும் எதிர்நீச்சல் சீரியல் நடிகை- குவியும் வாழ்த்துக்கள்

0
451
- Advertisement -

பிரம்மாண்டமாக எதிர்நீச்சல் சீரியல் நடிகை கட்டி இருக்கும் திருமண மண்டபம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருந்த சீரியலில் ஒன்று எதிர்நீச்சல். இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து முடியும் வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று இருந்தது.

-விளம்பரம்-

மேலும், இந்த சீரியல் அடக்கு முறைக்கு உட்படும் பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருந்தது. அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும், பெண்களுக்கான உரிமையையும் மையமாக கொண்ட கதை தான் எதிர்நீச்சல். மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன்- தம்பிகள் வாழ்ந்தார்கள். இவர்கள் இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டிருந்தார்கள். அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்களாக நடத்தி இருந்தார்கள்.

- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல்:

அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்து இருந்தார்கள். அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல் அந்த பெண்களும் அமைதியாக இருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வந்தார். இவர் அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்க, வீட்டில் பல பிரச்சனைகள் நடந்தது. இதனால் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடி இருந்தார்கள்.

சீரியலின் கதை:

இறுதியில் அந்த பெண்களின் நிலைமை என்ன? அவர்கள் வாழ்க்கையில் சாதித்தார்களா? ஆண் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டதா? என்று சீரியல் விறுவிறுப்பாக சென்று இருந்தது. மேலும், சில மாதங்களுக்கு முன்பு தான் இந்த சீரியலை திடீரென படக் குழுவினர் முடித்து விட்டார்கள். இது எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்திருந்தது. சமீபத்தில் தான் இந்த தொடரின் உடைய இரண்டாம் பாகம் தொடங்க இருப்பதாக அறிவித்திருந்தார்கள். ஆனால், இதில் சில நடிகர்களை மாற்றம் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-

சத்யா குறித்த தகவல்:

கூடிய விரைவில் எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் எதிர்நீச்சல் சீரியல் நடிகை சத்யா போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, இந்த சீரியலில் ஆதிரை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை சத்யா. இவர் எதிர்நீச்சல் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார்.

சத்யா பதிவு:

இவர் மாடலிங் மூலம் தான் தன்னுடைய கேரியரை தொடங்கினார். அதற்கு பின் இவர் சன் மியூசிக் சேனலில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருந்தார். அதற்கு பிறகு இவர் அருவி என்ற சீரியலின் மூலம் தான் நடிகையாக நடிக்க தொடங்கினார். இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது எதிர்நீச்சல் சீரியல் தான். இப்படி இருக்கும் நிலையில் சத்யா தன்னுடைய இன்ஸ்டாவில், தாங்கள் புதிதாக கட்டிருக்கும் மண்டபத்தின் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். இவரும் அவருடைய கணவரும் சேர்ந்துதான் இந்த மண்டபத்தை கட்டியிருக்கிறார்கள். தங்களின் மண்டபத்தின் பூஜையின் போது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இதற்கு பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement