வேலுநாச்சியார் கெட்டப்பில் எதிர்நீச்சல் ஜான்சி ராணி – இவங்களுக்கு நல்லாத்தான் இருக்குபா.

0
1654
Jhansirani
- Advertisement -

வேலு நாச்சியார் கெட்டப்பில் எதிர்நீச்சல் நடிகை ஜான்சி ராணி பதிவிட்டு இருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. சன் டிவி எதிர்நீச்சல் சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இந்த சீரியல் அடக்கு முறைக்கு உட்படும் பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார். அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும், பெண்களுக்கான உரிமையையும் மையமாக கொண்ட கதை தான் எதிர்நீச்சல். மேலும், மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன் தம்பிகள் வாழ்கிறார்கள். இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்களாக நடத்தி வருகிறார்கள்.

- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல்:

அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்கிறார்கள். அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல் அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார். இவர் அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் நடக்கிறது. பின் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுகிறார்கள்.

சீரியலின் கதை:

இன்னொரு பக்கம் மொத்த சொத்தையும் ஜீவானந்தம் அபகரித்து விடுகிறார். இதனால் குணசேகரன் மனம் உடைந்து கை கால் செயல் இழந்து இருக்கிறார். இதனால் சொத்தை மீட்க வீட்டு பெண்கள் போராடுகிறார்கள். இப்படி பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டு இருக்கிறது. மேலும், சீரியலில் ஜான்சி ராணி கதாபாத்திரத்தில் பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் காயத்ரி கிருஷ்ணன். இந்த சீரியலில் இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும், இவர் பல ஆண்டு காலமாக தொகுப்பாளராக இருந்து இருக்கிறார்.

-விளம்பரம்-

காயத்ரி கிருஷ்ணன் குறித்த தகவல்:

அதோடு இவர் திருநங்கைகள் பற்றி இருக்கிறார். பட்டமும் பெற்றிருக்கிறார். மேலும், மாடலிங்கில் இவர் கலக்கிக் கொண்டிருந்தார். இவருக்கு சிறு வயதிலிருந்தே டாக்டர் பட்டம் பெற வேண்டும் என்பது தான் அதிகமான ஆசை. இதனால் போராடி எம் பில் சேர்ந்து பட்டத்தை வாங்கினார். அதனை தொடர்ந்து இவர் பிஎச்டி படித்தார். முதலில் இவர் திரைத்துறையில் வாய்ப்பு தேடி அலையும் போது பல உருவ கேலிகளை சந்தித்து இருந்தாராம். சமீபத்தில் வெளியான அயலி என்ற வெப் தொடரில் மைதிலியின் அம்மாவாக இவர் நடித்திருந்தார்.

ஜான்சி ராணியின் புகைப்படம்:

அதுமட்டுமில்லாமல் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் ஒரு சிறு வேடத்தில் காயத்ரி கிருஷ்ணன் நடித்திருந்தார். இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது எதிர்நீச்சல் சீரியல் தான். இந்நிலையில் இவர் நடத்தி இருக்கும் போட்டோ ஷூட் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, காயத்திரி கிருஷ்ணன் அவர்கள் வேலுநாச்சியாரின் கெட்டப்பில் போட்டோ சூட் நடித்திருக்கிறார். இதை அவர் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் ஹார்ட்டின்களை போட்டு தெறிக்கவிட்டு வருகின்றார்கள்.

Advertisement