ஹாஸ்பிடல்ல இருந்து உடம்பு சரியில்லாம செத்துருந்தா கூட பரவாயில்லையே – மாரிமுத்து இறப்பு குறித்து எதிர் நீச்சல் இயக்குனர் திருச்செல்வம்.

0
3494
Ethirneechal
- Advertisement -

எதிர் நீச்சல் தொடர் நடிகர் மாரிமுத்து இறப்பு குறித்து இயக்குனர் திருச்செல்வம் பேசி இருக்கும் ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர் நீச்சல் தொடரில் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் அனைவரின் மனதையும் கவர்ந்தவர் மாரிமுத்து. தேனி மாவட்டம் பசுமலையை சேர்ந்த இவர் கவிஞர் வைரமுத்துவின் உதவியாளராக இருந்தவர் மேலும் தமிழ் சினிமாவில் ராஜ்கிரன் மணிரத்தினம் சீமான் எஸ் ஜே சூர்யா போன்ற பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.

-விளம்பரம்-

தமிழில் இவர் கண்ணும் கண்ணும், புலிவால், மருது, கடைக்குட்டி சிங்கம், போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் நடித்த பரியேறும் பெருமாள் படத்தின் படத்தில் நாயகியின் தந்தையாக ஒரு கொடூரமான ஜாதி வெறி பிடித்த ஒரு நபராக தனது சிறப்பான நடிப்பை காட்டி இருப்பார். இறுதியாக இவர் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தின் வில்லன் கேங்கில் ஒரு முக்கிய நபராக நடித்து இருந்தார்.

- Advertisement -

திடீர் மரணம் :

இப்படி ஒரு நிலையில் இன்று காலை மாரடைப்பு காரணமாக மாரிமுத்து திடீர் மரணமடைந்தார். டப்பிங் பேசிக்கொண்டு இருக்கும் போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும் உடனே அவரை மறுமுதவமனைக்கு அழைத்த செல்லப்பட்ட போது போகும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இன்று மாலை அவரது உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பசுமலை கிராமத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

திருச்செல்வம் உருக்கம் :

அவரது இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் மாரிமுத்துவின் இறப்பு குறித்து எதிர்நீச்சல் சீரியல் இயக்குனர் திருச்செல்வம் கூறியதாவது ‘ இது எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியான ஒரு விஷயம் இன்று காலை தான் படப்பிடிப்பிற்காக தயாராகிக் கொண்டிருந்தோம் நாங்கள் கேட்டபோது ஒரு படத்தின் டப்பிங் இருக்கிறேன் அதை முடித்துவிட்டு படப்பிடிப்பிற்கு வருகிறேன் என்று கூறியிருந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக அவருக்கு இப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது.

-விளம்பரம்-

பேரதிர்ச்சியில் இருக்கிறோம் :

இதை யாருமே எதிர்பார்க்கவில்லை. உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்து காலமாக இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால், நான் இப்படி ஒரு விஷயத்தை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. நாங்கள் அனைவருமே பேரதிர்ச்சியில் இருக்கிறோம். இது எங்களை விட ரசிகர்களை விட அவரது குடும்பத்திற்கு இது மிகப்பெரிய இழப்பு இதை எப்படி அவர்கள் தாங்க போகிறார்கள் என்று தெரியவில்லை.

அடுத்த குணசேகரன் யார் :

தற்போது மருத்துவமனையில் இருப்பதால் நான் எதுவம் பேசமுடியவில்லை என்று கூறியுள்ளார். எதிர் நீச்சல் தொடரில் மாரிமுத்து கதாபாத்திரம் தான் அந்த சீரியலின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தது. அதிலும் அவர் பேசிய ‘இந்தமா ஏய்’ என்ற வசனம் சமூக வலைத்தளத்தில் meme templeteஆக மாறியது. மாரிமுத்துவின் இழப்பால் எதிர்நீச்சல் ஆதி குணசேகரன் கதாபாத்திரம் கேள்விக்குறியாகி இருக்கிறது.

Advertisement