தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக இருந்த நடிகையின் மரணம் குறித்து திடுக்கிடும் தகவல்கள்.

0
4978

90களில் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சௌந்தர்யா. விஜயகாந்துடன் நடித்த சொக்கத்தங்கம் படம் இவருக்கு பெரும் புகழை பெற்றுத் தந்தது. பெங்களூரை சேர்ந்த இவர், 2003ல் அங்கு உள்ள பாரதிய ஜனதா கட்சியின் சேர்ந்து அரசியலில் குதித்தார்.

soundarya2

- Advertisement -

2004ல் அந்த கட்சிக்காக பிரச்சாரம் செய்துவிட்டு வரும் வழியில் ஹெலிகாப்டர் விபத்தில் உடல் கருகி உயிரிழந்தார். அதன் பின்னர் இவரது சொத்துக்களை அபகரிக்க திட்டம் தீட்டினார் இவரது உறவினர்கள். இதனால், கடந்த 2012ஆம் ஆண்டு இவரது பெங்களூரை வீட்டை உறவினர் பாக்கியலட்சுமி, அரசு அதிகாரி தயானந்த உதவியுடன் போலி ஆவணங்கள் தயாரித்து தனது பெயரில் மாற்றி எழுதினார்.

இதனால் லோக் ஆயுக்தா போலீசார் இந்த மோசடியை கண்டு அவர்கள் மீது வழக்கு தொடுத்தனர். அரசு அதிகாரி தயானந்த் அவருக்கு உடந்தையாக இருந்த இரண்டு பேர் மற்றும் பாக்கிலட்சுமி ஆகியோர் மீது மோசடி வழக்கு பதியப்பட்டது.

-விளம்பரம்-

soundarya3

இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு 4 பேரும் மனு அளித்திருந்தனர். தற்போது இந்த குற்றச்சாட்டு உறுதியாகியுள்ளதால், அவர்களுக்கு ஜாமீன் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டது நீதிமன்றம்.

மேலும் மர்மமான முறையில் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்து போனதால், அந்த விபத்திற்கு சௌந்தர்யாவின் உறவினர்களுக்கும் தொடர்பு இருக்கும் எனத் தெரிகிறது.

Advertisement