அறம் படத்தில், நயன்தாரா புடவையின் ரகசியம்- விளக்கும் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் !

0
1663
aram
- Advertisement -

நயன்தாரா கலெக்டராக நடித்து சமீபத்தில் வெளியான படம் அறம். இப்படம் சமூக அக்கரை உள்ள படமாக எடுக்கப்பட்டதால் மக்களிடையே ஏகோபித்த வரவேற்ப்பை பெற்றது.
aramபடத்தின் இயக்குனர் கோபி நயினார் படத்தை அற்புதமாக கொண்டு வந்துள்ளதாக பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வந்தனர். படத்தில் நயன்தாரா இரண்டு விதமான சேலைகளை மட்டும் தான் அணிந்து வருவார்.

அதிலும் கலெக்டராக இறங்கி வேலை செய்யும் போது ஒரே ஒரு க்ரே கலர் சேலை மட்டுமே அணிந்திருப்பார். இதற்க்கு காரணம் யாது என படத்தின் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் கூறியுள்ளார்.
Aramஅவர் கூறியதாவது:

“படத்தின் கதையைக் கேட்டவுடன் ஒரு சமூக அக்கரை உள்ள இப்படத்தில் இது போன்று தான் லைட் செட் செய்ய வேண்டும் என முடிவு செய்துவிட்டேன். மேலும், வரண்டு போன நம் மண்னை குறிக்கும் விதமாக படத்தில் வரும் கலெக்டர் நயன்தாராவிற்கு க்ரே கலர் சேலையுடன் அதற்கேற்ற லைட்டில் காட்டினால் தான் அதன் நிலைமை தெரியும்.
Aramஅதே போல், படம் முழுவதும் கண்ணீருடன் வரும் மக்களுக்கு மத்தியில் கலராக விதவிதமாக ஒரு அரசு அதிகாரி உடை அணிந்து வந்தால் கதைக்கு ஏற்ப்புடையதாக இருக்காது எனக் கூறி அதற்கேற்ற எந்த டிசைனும் செய்யப்படாத ப்ளைன் ஆன காட்டன் உடையை தேர்வு செய்தோம் எனக் கூறினார் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ்

Advertisement