ஒரே வார்த்தையில் பகத் பாசலின் மனதை நஸ்ரியா கொள்ளையடித்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழில் மிகப் பிரபலமான நடிகையாக இருந்தவர் நஸ்ரியா. இவர் முதலில் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக தான் தன்னுடைய கேரியரை தொடங்கி இருந்தார். ஆனால், இவர் மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பின் இவர் கதாநாயகியாக நடித்து இருக்கிறார்.

மேலும், இவர் சில படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து இருக்கிறார். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் மலையாளத்திலும் பல படங்களில் நடித்திருக்கிறார். பின் இவர் மலையாள மொழியின் முன்னணி நடிகரான பகத் பாசிலை காதலித்து 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதற்கு பின்பு நஸ்ரியா சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். தற்போது மீண்டும் தெலுங்கு மொழி படத்தின் மூலம் சினிமாவுக்கு நஸ்ரியா ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார்.
நஸ்ரியா திரைப்பயணம்:
தற்போது முதன்முறையாக இவர் தெலுங்கில் கதாநாயகியாக ‘அன்டே சந்தரானிக்கி’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை தமிழில் அடடே சுந்தரா என்ற பெயரில் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் நானி கதாநாயகனாக நடித்து இருக்கிறார். விவேக் ஆத்ரேயா இந்த படத்தை இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து இருக்கிறது. இவர்களுடன் இந்த படத்தில் ரோகிணி, நதியா, அழகம் பெருமாள், ராகுல் ராமகிருஷ்ணா உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.

மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து நஸ்ரியா படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இருந்தாலும், நஸ்ரியா-பகத் பாசில் கல்யாணம் குறித்து பலருமே சில சர்ச்சைகளை எழுப்பி தான் இருந்தார்கள். திருமணமான புதிதில் இவ்வளவு அழகாக இருக்கும் நஸ்ரியா ஏன் வழுக்கை தலையுடன் இருக்கும் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டார் என்றெல்லாம் மோசமாக விமர்சித்து இருந்தார்கள்.
ஆனால், இதைப் பற்றி எல்லாம் நஸ்ரியா- பகத் பாசில் இருவருமே கண்டுகொள்ளவில்லை. தங்களுடைய கேரியரிலேயே கவனம் செலுத்தி வந்தார்கள். இந்த நிலையில் இது தொடர்பாக செய்யாறு பாலு பிரபல பத்திரிக்கைக்கு பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், பெங்களூர் டேட்ஸ் படத்தின் போதுதான் நஸ்ரியா- பகத் பாஸில் இருவருக்குமே பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. அந்த சமயத்தில் தான் இருவரும் காதலிக்க தொடங்கினார்கள். நஸ்ரியா தான் முதலில் பகத் பாஸிலிடம் தன்னுடைய காதலை சொல்லி இருக்கிறார்.

நஸ்ரியா சொன்ன விஷயம் :
அப்போது நஸ்ரியா சொன்ன ஒரு விஷயத்தை தான் பகத் பாஸில் இன்றுவரை திருப்பி திருப்பி பல இடங்களில் சொல்லிக் கொண்டே இருக்கிறார். அது என்னன்னா, நான் உங்களை ஒரு குழந்தை போல கடைசி வரைக்கும் கண் கலங்காமல் பார்த்துக் கொள்வேன் என்று நஸ்ரியா கூறியிருக்கிறார். இதைக் கேட்டதுமே பகத் பாஸில் பூரித்து போய் ந ஸ்ரியாவின் காதலை ஏற்றுக் கொண்டார். பின் இருவரும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணத்தை செய்து கொண்டார்கள். நஸ்ரியாவை விட ஃபகத் பாஸில் 19 வயது மூத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.






