மீண்டும் ஒரு மிரட்டலான மலையாள படம் – FAFA வின் ‘ஆவேசம்’ எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

0
535
- Advertisement -

இந்த ஆண்டில் வெளியான மலையாள படங்கள் எல்லாமே தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருக்கிறது. அந்த வகையில் தற்போது மலையாள நடிகர் பகத் பாசில் நடித்திருக்கும் படம் தான் ஆவேசம். இந்த படத்தை ஜித்து மாதவன் இயக்கி இருக்கிறார். இவர் இதற்கு முன்பு ரோமன்சம் என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த படத்தில் பகத் பாசில் உடன் ஹிப்ட்ஸர், மிதுன், ரோஷன் ஷநவாஸ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சுஷின் ஷியாம் இசையமைத்திருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியிருக்கும் இந்த படம் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் பெங்களூர் பொறியியல் கல்லூரிக்கு கேரளாவில் இருந்து மாணவர்கள் படிக்க வருகிறார்கள். இவர்கள் தங்களுக்கு என்ற ஒரு கேங்கை அமைத்துக் கொண்டு சந்தோஷமாக வாழ்கிறார்கள். இவர்களுடைய சந்தோசத்தில் அந்த கல்லூரியின் சீனியர் பல பிரச்சனைகளை தருகிறார்கள். இருந்தாலும் இந்த கேங்கில் உள்ள மூன்று மாணவர்கள் அந்த சீனியர்களை எதிர்த்து பேசுகிறார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த சீனியர்கள் அந்த மூன்று நபரையும் ஒரு ரூமில் அடைத்து வைத்து பயங்கரமாக தாக்கி துன்புறுத்தினார்கள்.

- Advertisement -

பின் இந்த மூன்று மாணவர்களும் லோக்கல் சப்போர்ட்டுடன் அந்த சீனியர்ளை அடிக்க வேண்டும் என்று முடிவுடன் இருக்கிறார்கள். அப்போதுதான் அந்த ஏரியா உடைய டான் பகத் பாஷில் உடைய அறிமுகம் வருகிறது. இவருடைய நட்பு அந்த 3 மாணவர்களுக்கு கிடைக்கிறது. ஒரு கட்டத்தில் அந்த சீனியர்களை பகத் பாசில் அடிக்கவும் செய்கிறார். ஆனால், அந்த மூன்று மாணவர்களுக்கும் பகத் பாஸில் மூலமே பிரச்சனை வருகிறது.

அது என்ன பிரச்சனை? அந்த பிரச்சனையை மாணவர்கள் எதிர்கொண்டார்களா? இதையெல்லாம் பகத் பாஸில் எப்படி சமாளித்தார்? என்பதே படத்தின் மீதி கதை. படத்தில் ஹீரோ பகத் பாஸில் நடிப்பு அற்புதமாக இருக்கிறது. இவர் கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து செய்யும் சேட்டைகள் எல்லாம் அட்ராசிட்டியாக இருக்கிறது. எந்த கெட்டப்பிலும் பகத் பாஸில் பின்னி பெடல் அடிக்கிறார் என்று சொல்லலாம். சண்டை, நட்பு என எல்லாத்தையுமே ஸ்கோர் செய்து இருக்கிறார்.

-விளம்பரம்-

அதேபோல் படம் முழுவதுமே காமெடிகள் நிறைந்து இருக்கிறது. இவரை அடுத்து படத்தில் வரும் பிற நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். படத்தின் முதல் பாதி பயங்கர வேகமாக செல்கிறது. ஆனால், இரண்டாம் பாதி கொஞ்சம் தடுமாறுகிறது. மேலும் படத்தினுடைய கிளைமாக்ஸை பகத் தாங்கி சென்று இருக்கிறார். சொல்ல போனால், கிளைமாக்ஸ் சிறப்பாக அமைந்திருக்கிறது.

இந்த படத்தில் மலையாள இளைஞர்கள் குடித்துக் கொண்டே இருப்பார்கள் என்ற ஒரு சில சர்ச்சையான வசனங்கள் வந்திருக்கிறது. அதேபோல் கல்லூரி மாணவர்கள் என்றால் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் என்பது போல் காண்பித்து இருக்கிறார்கள். இதுதான் படத்திற்கு மைனஸாக அமைந்திருக்கிறது. படத்தின் பின்னணி இசை, ஒளிப்பதிவு எல்லாம் பக்க பலமாக இருக்கிறது. மொத்தத்தில் ஆவேசம் படம் குடும்பத்துடன் சென்று பார்க்கலாம்.

நிறை:

பகத் பாசிலின் நடிப்பு அட்டகாசம்

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்

ஒளிப்பதிவு, பின்னணி இசை நன்றாக இருக்கிறது

கிளைமாக்ஸ் காட்சி பட்டைய கிளப்பி இருக்கிறது

காமெடிகள் நன்றாக இருக்கிறது

குறை:

இரண்டாம் பாதியில் மெதுவாக செல்கிறது.

படத்தில் இளைஞர்கள் போதை பொருள் பயன்படுத்துவது போல காட்சிகள் இருக்கிறது. அதை தவிர்த்திருக்கலாம்

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்

முதல் பாதையின் வேகத்தை கொஞ்சம் குறைதீர்க்கலாம்

மொத்தத்தில் ஆவேசம் – இளைஞர்களுக்கு கொண்டாட்டம்

Advertisement