நயன்தாரா உதயநிதி ஸ்டாலின் மேல போலீஸ் புகார் தரப் போரால் – அமைச்சரின் பேச்சால் சர்ச்சை. வீடியோ இதோ.

0
1412
- Advertisement -

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் கடந்த 10 ஆண்டுகளாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா முன்னணி நடிகர்களோடு நடிப்பது மட்டுமல்லாமல் இவர் லீடு ரோலில் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார் அப்படி இவர் நடித்து வரும் பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடைந்துவிடுகிறது திரைப்பட வாழ்க்கையை தாண்டி தனிப்பட்ட வாழ்க்கையில் நடிகை நயன்தாரா பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து இருக்கிறார் பிரபுதேவாவுடன் காதல் சிம்புவுடன் காதல் என்று பல சர்ச்சைகளில் சிக்கிய நயன்தாரா இடையில் உதயநிதி ஸ்டாலினுடன் காதலில் இருப்பதாகவும் ஒரு கிசுகிசு எழுந்தது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் நடிகை நயன்தாரா நடிகர் உதயநிதி ஸ்டாலின் மீது போலீசில் புகார் அளிக்க உள்ளதாக அதிமுகவை சேர்ந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரே சமயத்தில் சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒருகலாக இருந்து வருகிறார் நடிகர் உதயநிதி ஸ்டாலின். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலுக்கு தற்போதே திமுக சார்பாக தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். சமீபத்தில் கூட  நாகை மாவட்டம் திருக்குவளையில் இருந்து உதயநிதி ஸ்டாலின் தனது முதல் கட்ட பிரச்சாரத்தை தொடங்கினார்.

- Advertisement -

ஆனால் இவர் பிரச்சாரத்தை தொடங்கி சில நிமிடங்களில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். உதயநிதி ஸ்டாலின் முதன் முதலில் சூர்யா மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான ஆதவன் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் தோன்றி இருந்தால் இந்த படத்தை உதயநிதி தான் தயாரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் ஹீரோவாக அறிமுகமான இவர் அதன்பின்னர் பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் அதுமட்டுமல்லாது இவர் நயன்தாராவுடன் இது கதிர்வேலன் காதல் நண்பேண்டா போன்ற படங்களில் நடித்துள்ளார். இப்படி ஒரு நிலையில் நடிகை நயன்தாரா, இவர் மீது புகார் அளிக்க உள்ளதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

வீடியோவில் 5 20 நிமிடத்திற்கு பின் பார்க்கவும் பார்க்கவும்

ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வாக்குசாவடி நிலைய முகவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் பால்வளத் துறை அமைச்சருமான K.T ராஜேந்திர பாலாஜி மற்றும் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் பால்வளத் துறை அமைச்சர் K.T ராஜேந்திர பாலாஜி சட்டமன்ற தேர்தல் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றி பேசிய போது தி மு கட்சியையும் ஸ்டாலின் மற்றும் உதயநிதியை கடுமையாக விமர்சித்து இருந்தார்.

-விளம்பரம்-
Congress MP to file complaint against Tamil Nadu minister for making  derogatory remarks | Cities News,The Indian Express

அப்போது பேசிய ராஜேந்திர பாலாஜி, அதிமுக புலி வேட்டைக்கு போய்க்கொண்டிருக்கிறோம். திமுக எலி வேட்டைக்கு வருகிறார்கள். நாம் அம்பை எடுத்து தொடுத்து வெற்றி பெற போகிறோம். திமுக தலைவர் ஸ்டாலினுக்கு புதிய பிரச்சனை ஒன்று உள்ளது.அவரை பழிவாங்க அவரது அண்ணன் மு.க.அழகிரி கிளம்பிவிட்டார்உதயநிதி ஸ்டாலினுக்கு பெரிய பிரச்சினை வருகிறது என்று தெரிவித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அவர் மீது நயன்தாரா புகார் கொடுக்கப் போகிறாள் என்று எனக்கு தகவல் வந்தது. அது என்ன புகார் என்று கேட்டால், அதை புகாரில் குறிப்பிடுவேன் என்று சொல்லிவிட்டாராம்., எனவே,  உதயநிதி ஸ்டாலின் போக்சோ சட்டத்தில் உள்ளே போகப் போகிறார் என்று பேசியுள்ளார்.

Advertisement