சோகத்திலும் மற்றோரு சோகம். சுஜித் என்று பகிரப்படும் மற்றொரு சிறுவனின் வீடியோ.

0
33285
sujith
- Advertisement -

ஆழ்துளை கிணற்றில் குழந்தை விழுந்து நான்கு நாட்கள் கடந்து விட்டது. தற்போது 2 வயதான சுஜித் தற்போது 88 அடி ஆழத்தில் சிக்கி தவித்து அநியாயமாக உயிர் இழந்து உள்ளான். குழந்தையை மீட்பதற்கு பத்துக்கும் மேற்பட்ட மீட்புக் குழுக்கள் முயற்சி செய்தும் பயனில்லாமல் போனது. தீபாவளி கொண்டாட்டத்தை தாண்டி பலரும் சுஜித்துக்காக பிரார்த்தனையும்,பூஜைகளும் செய்து கடைசியில் அழுகிய நிலையில் தான் வெளியே எடுத்தார்கள். தமிழகமே சுஜித் நிலையை குறித்து கதிகலங்கி உள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டு பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டான். மேலும்,இந்த கோர சம்பவம் கடந்த 4 நாட்களாக நிகழ்ந்தது.

-விளம்பரம்-
https://twitter.com/GopalaK95560233/status/1188936411434536960

ஆழ்துளை கிணற்றில் வெள்ளிக்கிழமை மாலை 5. 40 மணி அளவுக்கு விழுந்த குழந்தை முதலில் 26 அடியில் சிக்கியது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக 85 அடி ஆழத்திற்கு சென்று விட்டது குழந்தை. ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கிய குழந்தையை மீட்க அரசாங்கமும்,மக்களும் பல்வேறு முயற்சிகளை செய்து வந்தார்கள். ஆனால், எல்லா முயற்சிகளும் தோல்வியில் தான் போய் முடிந்தது. இந்நிலையில் தற்போது குழந்தையை மீட்க ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டு வந்தார்கள். அது ஆழ்துளை கிணறு அருகே சுரங்கம் போல் ஒரு குழியைத் தோண்டி அதன் வழியாக குழந்தையை மீட்கலாம் என்று முடிவு செய்து அதற்கான வேலைகளும் பரபரப்பாக செய்தார்கள் .

- Advertisement -

அதனை தொடர்ந்து என்எல்சி, ஒஎன்ஜிசி மற்றும் தனியார் அமைப்புகள் இணைந்து போர்வெல் அமைக்கும் கருவி மூலம் குழி தோண்டி சுரங்கம் போல் செய்து கொண்டு வந்தார்கள். ஆனால், ஆழ்துளை கிணறு பகுதியில் குழி தோண்டி செல்லும்போது அங்கு பாறைகள் அதிகமாக இருப்பதால் சுரங்கப் பாதையை ஏற்படுத்துவதில் கொஞ்சம் தாமதமானது. மேலும், குழந்தையை எப்படியாவது உயிருடன் மீட்க வேண்டும் என்று மக்களும், அரசாங்கமும் பல போராடங்களை சந்தித்து வந்தார்கள். மேலும், குழந்தை சுலபமாக மூச்சு விடுவதற்கு ஆக்சிஜன் மற்றும் குழந்தை பயமில்லாமல் இருப்பதற்காக உபகரன்கள் எல்லாம் செய்தார்கள். அதோடு சாதி,மதம்,மொழி,இனம் எல்லாவற்றையும் மறந்து தமிழக மக்கள் சுஜித் நிலை குறித்து பிராத்தனையும்,பூஜைகளும் செய்தார்கள்.அமைச்சர் விஜயபாஸ்கர்,கரூர் ஜோதிமணி உள்ளிட்ட பல அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தை மீட்க்கும் பணியில் வெறித்தனமாக செயல்பட்டார்கள். இவ்வளவு முயற்சிகள் செய்தும், நான்கு நாட்களை கடந்தும் சுர்ஜித்தை உயிருடன் வெளியே எடுக்க முடியவில்லை.

Image
சுஜித் என்று பகிரப்படும் போலியான புகைப்படம்

அரசாங்க அதிகாரிகளும்,பொது மக்களும் தீவிரமாக போராடியும் கடைசியில் சுஜித்தை உயிருடன் மீட்க முடியவில்லை. மேலும், சுஜித்தின் உடல் அழுகிய நிலையில் தான் எடுக்கப்பட்டது என தெரியவந்தது. பின்னர் சுஜித் இறந்து எவ்வளவு மணி நேரம் ஆனது என்பதை தெரிந்து கொள்வதற்காக சுஜித் உடலை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்கள். இதை தொடர்ந்து சுஜித் உடல் அஞ்சலிகாக வைக்கப்பட்டு சடங்குகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் சுஜித்தின் இந்த கோர சம்பவத்திற்கு தமிழகம் மட்டுமல்ல இந்தியாவே சோகத்தில் மூழ்கி உள்ளது. அதோடு அந்த பகுதி மக்கள் மட்டும் இல்லாமல் இந்தியாவில் உள்ள மக்களும் சுஜித் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

சுஜித்தின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சமூக வலைத்தளங்களில் சுஜித் சம்மந்தமாக ஹாஸ்டாக்கை உருவாக்கி இரங்கல் தெரிவிக்கிறார்கள் நெட்டிசன்கள். இந்நிலையில் சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்த போது சுஜித் சம்மந்தமாக புகைப்படமும், வீடியோவும் பகிரப்பட்டு வந்தது. மேலும், இது சமூக வலைதளங்களில் பயங்கரமாக பகிரப்பட்டது. அதேவேளையில் சுஜித் என்று கூறப்படும் அந்த புகைப்படத்தில் உள்ள சிறுவன் சுஜித்தே இல்லை என்ற தகவல் வெளிவந்துள்ளது. வேறு யாரோ! ஒரு சிறுவனின் புகைப்படத்தை போட்டு சுஜித் தான் என்று வதந்தியை கிளப்பி உள்ளார்கள். ஆனால்,மக்களும் உண்மை அறியாமல் பலரும் அந்த வீடியோவிலும், புகைப்படத்திலும் சோகமான கருத்துக்களை பதிவிட்டு இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement