தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் ஹோட்டலில் வேலை பார்த்த பெண்ணிடம் பல லட்சம் மோசடி செய்த நபர்.

0
420
udhayanidhi
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவர் குருவி படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். பின் ஆதவன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். நான்கு படங்களை தயாரித்த பின்னர் இவர் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார். தனது முதல் படமே அமோக வெற்றி பெற்றதால் அடுத்தடுத்து படங்களில் ஹீரோவாக நடித்தார் உதயநிதி. தற்போது இவர் கண்ணை நம்பாதே என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நான் உதயநிதி ஸ்டாலின் உடைய உதவியாளர் என்று கூறிக்கொண்டு பெண்களை ஏமாற்றி பணம் மோசடி செய்த இளைஞர் ராஜேஷ் கைது செய்யப்பட்டுள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

-விளம்பரம்-

திருப்பூர் மாவட்டம் செவ்வாத்தூரை அடுத்த புதூர் பகுதியை சேர்ந்தவர் தேன்மொழி. இவர் முதுகலை பட்டதாரி படித்து விட்டு வேலை தேடி சென்னை வந்துள்ளார். அப்போது இவரது தோழி மூலம் தான் ராஜேஷ் என்ற இளைஞர் இவருக்கு அறிமுகம் ஆகியிருக்கிறார். அவர் தேன்மொழியிடம் உங்களுக்கு நான் அரசு வேலை வாங்கித் தருகிறேன் என்றும், எனக்கு அரசியல்வாதிகளை தெரியும், பணம் கொடுத்தால் நிச்சயம் வேலை கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறி இருக்கிறார். இதை நம்பிய தேன்மொழி கடந்த 2018ஆம் ஆண்டு சுமார் 4.5 லட்சம் வரை பணத்தை ராஜேஷிடம் கொடுத்துள்ளார்.

- Advertisement -

வட்டிக்கு பணம் வாங்கி தந்த தேன்மொழி:

அதையும் ஊரில் ஒருவரிடம் வட்டிக்கு வாங்கி கொடுத்துள்ளார். ஆனால், ராஜேஷ் சொன்னது போல் வேலை வேலை வாங்கித் தரவில்லை. இதனால் தேன்மொழி ராஜேஷிடம் வேலை கேட்டு தொல்லை செய்திருக்கிறார். உடனே ராஜேஷ் வேலை ரெடியாக இருக்கிறது. இன்னும் சிலரை சேர்த்து விட்டால் அந்தத் துறையை நிரப்பி விடலாம். அதனால் உனக்கு தெரிந்த ஆட்களிடம் அரசு வேலைக்கு பணம் கொடுத்தால் மொத்தமாக சேர்ந்து பணி நியமன ஆணையை வாங்கி தருகிறேன் என்று மீண்டும் ஒரு பொய்யை கூறி இருக்கிறார்.

பெண்ணுக்கு மிரட்டல்..! சர்ச்சையில் சிக்கிய உதயநிதி ஸ்டாலின் பி.ஏ..? -  Madras Telegram
தேன்மொழி

லட்சக்கணக்கான பணத்தை மோசடி செய்த ராஜேஷ்:

இதையும் நம்பிய தேன்மொழி தனக்கு தெரிந்தவர்களிடம் இருந்து லட்சக்கணக்கான பணத்தை வாங்கி ராஜேஷ் இடம் கொடுத்துள்ளார். பின் பணத்தை வாங்கிய ராஜேஷ் யாருக்கும் வேலை வாங்கித் தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். இதனால் தேன்மொழியிடம் பணம் கொடுத்தவர்கள் அவரைக் வேலை தருமாறும் இல்லாவிட்டால் பணத்தை திருப்பித் தருமாறும் டார்ச்சல் செய்துள்ளார்கள். இதையடுத்து ராஜேஷ் பணத்தையும் கொடுக்க மறுத்து வேலையும் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தேன்மொழி ஒரு கட்டத்தில் தற்கொலைக்கு முயன்று இருக்கிறார். இந்த நிலையில் திருப்பத்தூர் காவல்துறையில் தேன்மொழி புகார் அளித்தார்.

-விளம்பரம்-

போலீசில் புகார் அளித்த தேன்மொழி:

ஆனால், அந்த புகாருக்கு போலீசார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை அடுத்து மீண்டும் ராஜேஷை தொடர்புகொண்டு தேன்மொழி தனது கஷ்டங்களை சொல்லி வேலை கிடைக்கிவில்லை என்றாலும் பரவாயில்லை பணத்தை கொடுத்து விடுங்கள் என்று கேட்டுள்ளார். அப்போது ராஜேஷ் நடப்பது எங்கள் ஆட்சி. நான் உதயநிதி ஸ்டாலின் பிஏ. தலைமை செயலகத்திற்கு ஆட்களை கூட்டிட்டு வா. அத்தனை பேரையும் வெட்டுகிறேனோ குத்துகிறேனோ நான் பார்த்துக் கொள்கிறேன்.

கைது செய்யப்பட்ட ராஜேஷ்:

நீ எங்க போனாலும் உனக்கு தான் ஆபத்து என அந்த பெண்ணை மிரட்டி இருக்கிறார். பின் அந்த ஆடியோ சோஷியல் மீடியாவில் வைரலானது. இதனையடுத்து போலீசார் ராஜேஷை கைது செய்தனர். போலீஸ் நடத்தப்பட்ட விசாரணையில் ராஜேஷ் எந்த அரசியல் கட்சியும் சேர்ந்தவர் இல்லை. உதயநிதிக்கு உதவியாளரும் இல்லை என்பது தெரியவந்தது. இதனை அடுத்து அவரிடம் போலீஸ் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Advertisement