படத்தில் மட்டும் இல்லை…நிஜத்திலும் இவர்கள் காதலர்களா..? அவர்களே சொன்ன உண்மை தகவல்.!

0
718
Aditthya-basker

நடிகர் விஜய்சேதுபதி மற்றும் நடிகை த்ரிஷா நடிப்பில் வெளியான “96” திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷாவின் பள்ளி பருவ கதாபாத்திரத்தில் பிரபல காமெடி நடிகர் எம் எஸ் பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கர் நடித்துள்ளார்.

மேலும், நடிகை த்ரிஷாவின் பள்ளி பருவ கதாபாத்திரத்தில் பிரபல நடிகை தேவதர்ஷினியின் மகள் கௌரி கிஷனும் என்பவரும் நடித்துள்ளார். இந்த படத்தில் ராம்-ஜானு ஜோடிதான் இணையத்தில் ஹாட் டாபிக்காக இருந்து வருகிறது. அதில் ஆதித்யா பாஸ்கர் மற்றும் கௌரி கிஷனின் நடிப்பும் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது.

- Advertisement -

சமூக வலைத்தளத்திலும் ஆதித்யா பாஸ்கர் மற்றும் கௌரி கிஷனின் புகைப்படங்களும் படு வைரலாக பரவி வருகிறது. அதே போல ஆதித்யா பாஸ்கர் மற்றும் கௌரி கிஷன் இருவரும் காதலித்து வருவதாகவும் சில செய்திகளும் பரவி வந்தது.

adithya

-விளம்பரம்-

ஆனால்,தங்களுக்குள் எந்த ஒரு காதலும் இல்லை என்று நடிகை கௌரி கிஷன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெளிவுபடுத்தியுள்ளார். அதில், நாங்கள் இருவரும் காதலர்கள் இல்லை. ராம்-ஜானு எனும் காதல் ஜோடிகளின் கேரக்டரில் நடித்தோம் அவ்வளவுதான். உண்மையில், எங்களுக்குள் காதல் இல்லை. எங்களைப் பற்றி வரும் வதந்திகளைப் பரப்பாமல் இருங்கள் என பதிவிட்டுள்ளார். அந்த பதிவை நடிகர் ஆதித்யாவும் ரீ ட்வீட் செய்துள்ளார்.

Advertisement