74 வயதில் பிரபல தொகுப்பாளர் மரணம் – நண்பரின் உருக்கமான பதிவு.

0
1482
- Advertisement -

இலங்கை வானொலி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் நடராஜசிவம். இவர் நேற்றிரவு 11.30 மணியளவில் தனியார் மருத்துவமனை ஒன்றில் காலமானார். தற்போது இவருக்கு 74 வயதாகிறது. வெள்ளித்திரை, சின்னத்திரை பிரபலங்களை போலவே வானொலி மற்றும் டிவி தொகுப்பாளர்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்கள். அந்த வகையில் பல வானொலி நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கி பல்லாயிரக்கணக்கான நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர் ஒலிபரப்பாளர் நடராஜசிவம். நீண்ட காலம் இலங்கை ஒலிபரப்பில் பணியாற்றிய இவர் சூரியன் எம் எம் வானொலி ஆரம்பித்த போது முதலாவது பணியாளராக பணிபுரிந்துள்ளார். பின்னர் இவர் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். நாடகங்கள் மூலம் கிடைத்த வரவேற்ப்பின் மூலம் இவர் சினிமாவிலும் படங்களில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

இவர் தமிழ் மற்றும் சிங்கள மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாகவே உடல்நிலை குறைவால் தத்தளித்து வந்துள்ளார். பின் இவருக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரின் மறைவிற்கு இலங்கையை சேர்ந்த ரசிகர்கள் மற்றும் இலங்கை வானொலி சார்பிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வானொலி மூலம் பிரபலமடைந்த நடராஜசிவம் காலமானது குறித்து அவருடைய நெருங்கிய நண்பர் சோகமான பதிவை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

அவர் வேற யாரும் இல்லை பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி அதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த அப்துல் ஹமீத் அவர்கள் டிவிட்டர் பக்கத்தில் தனது நண்பர் நடராஜ சிவம் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு இரங்கலை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, என் ஆருயிர் தோழனை இழந்தேன். சிறுவர் மலர் காலத்திலிருந்தே ஊடகத்துறையில் நாங்கள் ஒன்றாக பயணித்தோம். இளமைக்காலத்தில் நடராஜ சிவத்தையும் தன் பிள்ளைகளில் ஒருவன் ஆகவே பாவித்து என்னுடைய அன்னை பாசம் காட்டி வளர்த்தார்.

Shathiesh - Home | Facebook

நாங்கள் ஒன்றாகவே வளர்ந்து வந்தோம். மேலும், நாங்கள் இருவரும் பல நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து உள்ளோம். எங்களுக்கு கிடைக்கும் சம்பளத்தை வைத்து விதவிதமான உணவுகளை உண்டு மகிழ்வோம். பிறகு கால கட்டாயத்தினால் நாங்கள் இருவரும் வெவ்வேறு திசைகளில் பயணித்தோம். இந்து கலாச்சார அமைப்பு நம் இருவருக்குமே கலையரசு என்று வாழ்நாள் சாதனை விருது வழங்கிய போது தான் நாம் கடைசியாக சந்தித்தோம் என்று மனமுருகி இரங்கலை தெரிவித்து இருக்கிறார்.

Advertisement