அச்சு அசலாக சௌந்தர்யா போலவே இருக்கும் பெண் – வைரலாகும் இன்ஸ்ட்டா ரீல்ஸ் வீடியோ.

0
579
- Advertisement -

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டடங்களில் மிகவும் பிரபலமான நடிகையாக கொடிகட்டி பறந்தவர் நடிகை சௌந்தர்யா. இவர் தமிழ் சினிமா மட்டுமின்றி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் நடித்திருக்கிறார். மேலும் தமிழ் சினிமாவில் அப்போதய முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த, உலகநாயகன் கமலஹாசன், கார்த்தி, விஜயகாந்த என தமிழ் சினிமாவையே ஒரு வலம் வந்தார்.

-விளம்பரம்-

சினிமா அறிமுகம் :

இவரது தந்தை தென்னிந்திய சினிமாவில் பிரபலாமான தயாரிப்பாளரும், திரைப்பட எழுத்தாளரும் ஆவார். தொடக்கத்தில் மருத்துவம் படித்து வந்த இவர் பின்னாளில் நடிப்பின் மீது கொண்ட காதலினால் படிப்பை நிறுத்திவிட்டு சினிமாவில் நடிக்க வந்துவிட்டார். 1993ஆம் ஆண்டு வெளியான பொண்ணு மணி என்ற தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்த்து வைத்தார்.

- Advertisement -

நடித்த படங்கள் :

அதன் பின்னர் ரஜினிகாந்துடன் அருணாச்சலம், படையப்பா, விஜயகாந்துடன் சொக்கத்தங்கம் போன்ற படங்களினால் முன்னணி நடிகையாக மாறினார். பின்னர் இவருடன் அபாரமான நடிப்பினால் இவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தனர். மேலும் குறைவான காலத்தில் தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம், என நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்து விட்டார். இவர் கடந்த 200ஆம் ஆண்டு ஜி.எஸ் ராகு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரது தாய் மென்பொருள் பொறியாளர் என்பது குறிப்பிடதக்கது.

விபத்தில் மறந்த சௌந்தர்யா :

இப்படி பட்ட நிலையில் தான் நடிகை சௌந்தர்யா 2004 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள ஹெலிகாப்டரில் சென்று இருந்தார்.அப்போது திடீரென்று ஏற்பட்ட விபத்தில் சௌந்தர்யா அவர்கள் அநியாயமாக உயிரிழந்தார். அப்போது அவர் இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்தார். அவரின் இழப்பு தென்னிந்திய சினிமாவிற்கு மிகப்பெரிய இழப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.

-விளம்பரம்-

வைரலாகும் புகைப்படம் :

இப்படி பட்ட நிலையில் தான் மறைந்த நடிகை சௌந்தர்யாவை போல ஆட்சி அசலாக இருக்கும் பெண் ஒருவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவுகளை பதிவிட்டு வருகிறார். சித்ரா என பெயர் கொண்ட இவர் பார்ப்பதற்கு மறைந்த நடிகை சௌந்தர்யாவை போல அப்படியே இருக்கிறார். இவரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகள் வைரலானதை தொடர்ந்து யார் இது சௌந்தர்யாவை போல அப்படியே இருக்கிறாரே என ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

Advertisement