-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

500கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்தும் கிடைக்காத அங்கீகாரம், Mgr முதல் விஜய் படம் வரை நடித்த இவர் என்ன ஆனார் தெரியுமா ?

0
221

காலப்போக்கில் காணாமல் போன நடிகர் பசி நாராயணன் குறித்து பலரும் அறியாத தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே சினிமா உலகில் பல நடிகர்கள் கடுமையாக உழைத்து போராடினாலும் அவர்களுக்கான அங்கீகாரமும் இடமும் கிடைப்பதில்லை. பின் காலப்போக்கில் அவர்கள் என்ன ஆனார்கள்? என்று கூட தெரியாமல் போய்விடுகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போன பசி நாராயணன் என்ற நடிகரை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம்.

-விளம்பரம்-

இவர் சிவகாசி மாவட்டத்தில் பிறந்தவர். இவர் தன்னுடைய 15 வயதில் நடிக்க தொடங்கினார். ஆரம்பத்தில் இவர் மேடை நாடகங்களில் தான் நடித்து கொண்டு இருந்தார். அதற்கு பின் தான் இவர் சினிமாவில் நடித்தார். இவர் முதன் முதலில் பசி என்ற படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமானார். அதில் இருந்த இவரை பசி நாராயணன் என்று அழைக்க ஆரம்பித்தார்கள். மேலும், 60 காலகட்டத்தில் தொடங்கி 90 காலகட்டம் வரை நடித்து கொண்டு இருந்தார்.

கவுண்டமணி – செந்தில் காம்போவில் :

மேலும், இவர் நடிப்பது மட்டுமில்லாமல் கதை சொல்லல், எழுதுதல், நடனம் போன்ற பல திறமைகளைக் கொண்டிருந்தார். சிவாஜி, எம்ஜிஆர் படங்களில் தொடங்கி ரஜினிகாந்த், கமலஹாசன், பாண்டியராஜன், கார்த்திக், சரத்குமார், பிரபு போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்திருக்கிறார். கடைசியாக இவர் நினைத்தேன் வந்தாய் என்ற படத்தில் நடித்திருந்தார். குறிப்பாக, செந்தில் கவுண்டமணியின் காமெடியில் இவரை பார்க்கலாம்.

-விளம்பரம்-

செந்தில் கவுண்டமணியை சேர்ப்பது, பிரிப்பது போன்ற காட்சிகளில் இவர் நடித்திருப்பார். அது மட்டும் இல்லாமல் கவுண்டமணியின் நிறைய படங்களில் இவர் முக்கிய காமெடியனாக கூட நடித்து இருக்கிறார். மேலும், படத்தில் இவருடைய சின்ன சின்ன வசனம், முக பாவனைகளும் நடிகனுக்கு உரிய வகையில் இருக்கும். இதுவரை இவர் கிட்டத்தட்ட 500 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இருந்தாலும், தமிழ் சினிமாவில் இவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை.

-விளம்பரம்-

பசி நாராயணன் மறைவு:

பெரும்பாலும் ரசிகர்கள் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பவர்களை மட்டும் தான் நினைவில் வைத்திருக்கிறது. மக்களும், சினிமாவுமே போராடி முன்னேறும் சிறிய கலைஞர்களை கண்டு கொள்வதில்லை. இவர் தமிழ் சினிமாவில் அங்கீகரிக்கப்பட வேண்டிய நடிகர்களின் ஒருவர்தான். பின் 1998 ஆம் ஆண்டு இவருடைய இதயம் செயலிழந்ததால் பசி நாராயணன் இறந்து விட்டார். இதனிடையே இவர் வள்ளி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ஜெயலலிதா செய்த உதவி:

இவருக்கு ஓரு மகன், இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். பசி நாராயணனின் மறைவிற்கு பிறகு அவருடைய குடும்பம் வறுமையில் தத்தளித்துக் கொண்டிருந்தது. இவருடைய குடும்ப சூழ்நிலையை புரிந்து கொண்ட மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் நிவாரண நிதி வழங்கி இருந்தார். கிட்டத்தட்ட 10 லட்சத்தை கொடுத்திருந்தது. அது மட்டும் இல்லாமல் மாதந்தோறும் 8,125 ரூபாய் வள்ளிக்கு கிடைக்கும் வகையிலும் ஏற்பாடு செய்திருந்தார்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news