பிரபல காமெடி நடிகரின் மகன் பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களாகவே பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி குறித்த செய்தி தான் அதிகமாக இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. பிரம்மாண்டமாக விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை 7 சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது. இந்த ஏழு சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கியிருந்தார். ஆனால், கமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்து இருந்தார்.
இதை அடுத்து யார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்கள்? என்ற கேள்வி எழுந்தது. அதன் பின் இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார் என்று சேனல் தரப்பில் இருந்து ப்ரோமோ வீடியோ வெளியாகி இருந்தது. இதனால் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாகவும், விஜய் சேதுபதிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். அதனை தொடர்ந்து சமீபத்தில், பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்க இருக்கும் தேதி குறித்த புது ப்ரோமோ வெளியாகி இருந்தது.
பிக் பாஸ் 8 ஆரம்பம்:
அதில், வருகிற அக்டோபர் முதல் வாரம் அதாவது 6 ஆம் தேதி மாலை 6 மணிக்கு விஜய் டிவியில் பிக் பாஸ் 8 ஒளிபரப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரபூர்வமாக சேனல் தரப்பிலிருந்து வெளியிட்டு இருக்கிறார்கள். அதோடு பிக் பாஸ் 8 நிகழிச்சிக்கான போட்டியாளர்கள் தேர்வும் முடிந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் இந்த பிக் பாஸ் 8 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் குறித்த பட்டியல் சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது.
பிக் பாஸ் 8 போட்டியாளர்கள்:
அதில், குரேஷி (விஜய் டிவி காமெடியன்), அருண் பிரசாத் (பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர்) , ஷாலின் ஜோயா ( குக் வித் கோமாளி பிரபலம்), ரியாஸ் கான் (நடிகர்) , பூனம் பஜ்வா (நடிகை), ஜெகன் (காமெடி நடிகர்), ரஞ்சித் (பிரபல நடிகர்), அமலா ஷாஜி (சோசியல் மீடியா பிரபலம்), சம்யுக்தா விஸ்வநாதன் (கட்சி சேரா பாடல் புகழ் நடிகை) ப்ரீத்தி முகுந்தன் (ஸ்டார் பட நடிகை), டிடிஎஃப் வாசன் (youtube சர்ச்சை பிரபலம்), ஆர் ஜே ஆனந்தி, வில்லியம் பேட்ரிக் (சோசியல் மீடியா பிரபலம்), சுனிதா (விஜய் டிவி பிரபலம்), VTV கணேஷ்(திரைப்பட காமெடி நடிகர்), மா கா பா ஆனந்த் (விஜய் டிவி தொகுப்பாளர்) ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
நிகழ்ச்சி குறித்த அப்டேட்:
இது ஒரு பக்கம் இருக்க, பிக்பாஸ் வீட்டிற்க்கான ஷெட் அமைக்கும் பணி செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. இந்த வேலையை செய்து கொண்டிருக்கும் போது வட மாநில இளைஞர் ஒருவர் 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து அவருடைய கை மற்றும் இடுப்பு பகுதிகளில் அதிக காயம் மற்றும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. தற்போது இவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் பிக் பாஸ் ஷெட் அமைக்கும் பணிகள் தாமதமாகப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் மற்றொரு போட்டியாளர் குறித்த தகவல் தான் வெளியாகி இருக்கிறது.
காமெடி நடிகர் மகன்:
அதாவது, மறைந்த பிரபல காமெடி நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. காமெடி நடிகர் மயில்சாமிக்கு இரண்டு மகன்கள். இவருடைய இளைய மகன் யுவன். இவர் தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தங்கமகள் சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும், இவருடைய மூத்த மகன் தான் அன்பு தான் பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தினுடைய சிபாரிசினால் தான் இவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்ததாக கூறப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.