பிரபல இயக்குனர் மற்றும் நடிகருமான டி.பி.கஜேந்திரன் காலமானார் – சோகத்தில் திரையுலகம்.

0
789
- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்டவர் டிபி கஜேந்திரன். இவர் தற்போது உடல்நிலை குறைவின் காரணமாக காலமாகி இருக்கிறார் என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இவர் தமிழ் சினிமாவில் கடந்த 1988 ஆம் ஆண்டு நடிகர் மற்றும் இயக்குனரான விசு மற்றும் கேஆர் விஜயா நடிப்பில் வெளியாகிய வீடு மனைவி மக்கள் என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் தன்னை ஒரு இணயக்குனராக அறிமுகப்படுத்திக் கொண்டார்.

-விளம்பரம்-

இயக்கிய படங்கள் :

இப்படத்தை தொடர்ந்து தாயா தாரமா, பாண்டி நாட்டு சங்கம், எங்க ஊரு காவக்காரன், பம்மல் கே.சம்பந்தம், பாட்டு வாத்தியார், சீனா தானா, பட்ஜெட் பத்மநாதன் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். மேலும் பல படங்களில் காமெடி நடிகராகவும், குணச்சித்திர வேடத்திலும் நடித்து தன்னுடைய நகைச்சுவை ஆற்றலினால் மற்றவர்களை சிரிக்க வைத்திருக்கிறார். அதோடு இவர் பிரபல சினிமா நடிகையான டி பி முத்துலட்சிமி அவர்களில் மகனும் ஆவார்.

- Advertisement -

மு.க. ஸ்டாலின் நண்பர் :

இவர் தமிழ் சினிமாவில் குடும்ப கதைகளில் ஜாம்பவானாகிய விசுவிடம் துணை இயக்குனராக பணியாற்றி அந்த அனுபவத்தின் மூலம் டி பி கஜேந்திரன் தன்னை ஒரு இணயக்குனராக மாற்றிக்கொண்டார். மேலும் இவர் தற்போது தமிழ் நாட்டின் முதலமைச்சராக இருக்கும் மு.க. ஸ்டாலின் அவர்களுடன் ஒன்றாக விவேகானந்தா கல்லூரியில் பியுசி படித்தவர் என்பது குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் டி பி கஜேந்திரன் சில ஆண்டுகளுக்கு முன்னர் உடல் நாலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் அவரை கடந்த ஆண்டு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார் என்பது குறிப்பிடதக்கது. இப்படி பட்ட நிலையில் தான் நடிகர் மற்றும் இயக்குனராகிய டி பி கஜேந்திரன் தன்னுடைய 68 வயதில் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார் என்ற செய்தி வெளியாகி உள்ளது.

-விளம்பரம்-

டி பி கஜேந்திரன் மறைவு :

இவரின் இறப்பு தமிழ் சினிமாவிற்கு பேரிழப்பு என்று தான் சொல்லவேண்டும் கடந்த ஒரு வாரமாகவே சினிமா உலகின் பிரபலங்களாக இருந்த இயக்குனர் விஸ்வநாத், பிரபல பாடகி வாணி ஜெயராம் காலமான நிலையில் தற்போது இவரும் காலமாகி இருக்கிறார் என்ற தகவல் மக்கள் மத்தியில் சோகத்தை ஆழ்த்தியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட டி பி கஜேந்திரனின் மறைவு திரையுலகிற்கு பேரிழப்பாக பார்க்கப்படுகிறது.

Advertisement