யாரடி நீ மோகினி சீரியலை முடிச்சி விடுங்க – ஜீ தமிழ் பக்கத்தில் ரசிகர் போட்ட கமன்ட் . நடிகை கொடுத்த நறுக் பதில்.

0
1888
yaradi
- Advertisement -

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்து விடுகின்றது. ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல்களை கொண்டுவர தொலை காட்சிகள் அனைத்தும் மூலமாக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது அந்த வகையில் தற்போது தொலைக்காட்சி ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்து வருவது ஜீ தமிழ் தொலைக்காட்சி தான் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு பெற்றுள்ளது.

-விளம்பரம்-

அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் இன்றைய தேதியில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது, ‘யாரடி நீ மோகினி’ சீரியல் தான். சன் தொலைக்காட்சியில் ஒளிப்பிரான நந்தினி சீரியலுக்கு பிறகு தென்னிந்திய தொலைக்காட்சி வரலாற்றில் அதிக பட்ஜெட்டை கொண்டு உருவான சீரியல் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் சஞ்சீவ் ஹீரோவாக நடிக்க, வில்லிகளாக பாத்திமா பாபு, சைத்ரா ரெட்டி இருவரும் நடித்தன.

- Advertisement -

ஆரம்பத்தில் இந்த சீரியலில் சஞ்சீவ் நடித்து வந்தார். அதன் பின்னர் அவர் நீக்கப்பட்டு தற்போது பிரபல சீரியல் நடிகரான ஸ்ரீகணேஷ் நடித்து வருகிறார். இந்த சீரியல் தற்போது 910 எபிசோடுகளுக்கு மேல் கடந்துள்ளது. இதில் சைத்ரா ரெட்டியின் பெர்ஃபாமன்ஸ் காரணமாகவே இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நம்பர் ஒன் இடத்திலிருப்பதாக அவரது ரசிகர்கள் பெருமிதம் கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இப்படி ஒரு நிலையில் ஜீ தமிழ் நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்திருந்தது. அதில், இந்த மாதம் உங்க மிகப்பெரிய எதிர்பார்ப்பு என்ன? கமென்ட் பண்ணுங்க என்று குறிப்பிட்டு இருந்தது. அதற்கு ரசிகர் ஒருவர், இந்த யாரடி நீ மோகினி சீரியலை தயவு செஞ்சி முடிச்சி விட்ருங்க ப்ளீஸ். எங்களால முடியல என்று கமன்ட் செய்து இருந்தார். அதற்கு இந்த சீரியலில் நடித்து வரும் சைத்ரா ரெட்டி,

-விளம்பரம்-
Advertisement