படப்பிடிப்பு தளத்தில் பேட்ட வில்லனின் கழுத்தை பிடித்த நபர்.! ஏன் தெரியுமா.!

0
487
Nawasudeen
- Advertisement -

கடந்த ஜனவரி 10 ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘பேட்ட’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் முதன் முறையாக தமிழ் சினிமாவில் கால் பதித்தார் பிரபல இந்தி நடிகர் நவாஸுதீன் சித்திக்.

-விளம்பரம்-
View this post on Instagram

Crazy selfie fan #nawazudinsiddiqui #kanpur

A post shared by Viral Bhayani (@viralbhayani) on

தமிழில் பரிட்சயமான முகம் இல்லை என்றாலும் இவர் இந்தியில் படு பேமஸ். நவாஸுத்தீன் சித்திக்கி புதுமுகம் ஹனி த்ரிஹானின் இயக்கத்தில் ராத் அகேலி ஹை என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் கான்பூரில் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பில் நவாசுதீனும் கலந்துகொண்டுள்ளார்.

- Advertisement -

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு அவர் கிளம்பும் போது அங்கே கூடியிருந்த ரசிகர்கள் சிலர் அவரை சுற்றிவளைத்து அவருடன் செல்ஃபி எடுக்க முயற்சித்துள்ளனர் இதனால் கூட்ட நெரிசலில் சிக்கி மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளார்.

அப்போது ஒரு ரசிகர் நவாசுதீன் இடம் செல்பி எடுக்க முயன்றபோது நவாசுதீனின் கழுத்தைப் பிடித்து இழுத்துள்ளார். இதனால் செய்வதறியாது நின்றார் நவாசுதீன். இதனை கண்ட அவரது பாதுகாவலர்கள் அந்த ரசிகரிடமிருந்து நவாஸுதீனை காப்பாற்றினர். அதன்பின்னர் நவாசுதீன் அந்த இடத்தை விட்டு எப்படியோ பத்திரமாக காரில் புறப்பட்டு சென்றார்.

-விளம்பரம்-

Advertisement