தோனிக்கு நடந்தது போல விஜயை தாவி கட்டிப்பிடித்த ரசிகர்.! வைரலாகும் வீடியோ.!

0
480
- Advertisement -

நடிகர் விஜய் தற்போது அட்லியின் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நயன்தாரா, கதிர் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். மேலும், இப்படத்தில் வில்லனாக இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பல்வேறு இடங்களில் தற்போது நடைபெற்று வருகிறது.

-விளம்பரம்-

இந்த படத்தில் நடிகர் விஜய் ஒரு கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார் என்றும், மேலும், இந்த படம் பெண்கள் கால்பந்து போட்டியை மையமாக கொண்ட கதையாக இருக்கும் என்றும் ஏற்கனவே பல தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட விஜய் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.

- Advertisement -

அந்த வீடியோவில் விஜய், ரசிகர்களை நோக்கி கையசைத்து கொண்டிருக்கையில் திடீரென்று ரசிகர் ஒருவர் விஜயை நோக்கி ஓடி வந்து அவரை கட்டிபிடித்துக்கொண்டார். சமீபத்தில் தோனியை கட்டிப்பிடிக்க ரசிகர் ஒருவர் மைதானத்தில் உள்ளே ஓடிய வீடியோ படு வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement