இத பாத்தா சமந்தா மாதிரியா இருக்கு ? சொன்னபடியே சமந்தாவின் பிறந்தநாளில் கோவிலை திறந்த ரசிகர்.

0
444
Samantha
- Advertisement -

என்னதான் நவீன உலகம் பல முன்னேற்றத்தை நோக்கி பயணித்து கொண்டு இருந்தாலும், அன்றும் இன்றும் என்றும் மக்களிடத்தே குறையாதது சினிமா மோகம் தான். பொதுவாக தங்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகளின் படம் வந்தா கட் அவுட் வைப்பது, அதற்கு பாலபிஷேகம் செய்வது என்று தான் பார்த்திருப்போம். அதிலும் ஒரு சில ரசிகர்கள் ஒரு படி மேலே போய் அலகு குத்திக்கொள்வது, மண் சோறு சாப்பிடுவது, கையில் கற்பூரம் ஏற்றுவது என்று கடவுளுக்கு செய்வதை நடிகர் நடிகைகளுக்கும் செய்யும் வேடிக்கையும் அவ்வப்போது நடந்து தான் வருகிறது.

-விளம்பரம்-

தமிழ் நாட்டில் முதன் முதலில் குஷ்பூவிற்கு தான் கோவில் கட்டப்பட்டது. அது அப்போது பெரிய சர்ச்சையை ஏற்ப்படுத்தி இருந்தது. இதனை தொடர்ந்து நடிகை நயன்தாராவிற்கு ரசிகர்கள் சிலர் கோவில் கட்டி சிலை வைத்தனர். இதெற்கெல்லாம் தொடர்ச்சியாக சினிமாவிற்குள் நுழைந்த சில ஆண்டுகளே ஆன நடிகை நிதி அகர்வாலுக்கு கூட ரசிகர் ஒரு சிலை வைத்து அதனை கடவுளாக வழிபட்டார்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் தற்போது சமந்தாவிற்கும் ரசிகர் ஒருவர் தனது வீட்டிலேயே கோவில் கட்டியுள்ளார். தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. இந்தியாவின் பல மொழி படங்களில் நடிகை சம்ந்தா நடித்திருந்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கில் தான் இவர் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் கடந்த ஆண்டு வெளிவந்த புஷ்பா அந்த “ஊ சொல்றியா” என்ற பாடலுக்கு நடனமாடி ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தார்.பின் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்து இருந்தார். அதேபோல் சமீப காலமாக தெலுங்கு சினிமாவில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் நடிகை சமந்தா.

தமிழ் நாட்டை விட சமந்தாவிற்கு தெலுங்கில் ரசிகர்கள் அதிகம். இந்த நிலையில் ஆந்திராவை சேர்ந்த நடிகை சமந்தாவின் தீவிர ரசிகரான தெனாலி சந்தீப் என்பவர் நடிகை சமந்தாவுக்காக கோவில் ஒன்றை கட்டி உள்ளார். அவர் ஆந்திர மாநிலம் பாபட்லாவில் உள்ள ஆலபாடு என்கிர கிராமத்தில் தனது வீட்டிலேயே இந்த கோவிலை கட்டி உள்ளார். அந்த கோவிலில் வைக்கப்பட உள்ள நடிகை சமந்தாவின் சிலையின் புகைப்படங்கள் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

-விளம்பரம்-

நடிகை சமந்தாவின் பிறந்தநாள் ஏப்ரல் 28-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் இந்த கோவிலை திறக்க உள்ளதாக தெனாலி சந்தீப் அறிவித்துள்ளார். நடிகை சமந்தாவின் அழகைப் பார்த்தோ அல்லது அவரது நடிப்பைப் பார்த்தோ அவரது ரசிகர் ஆகவில்லை என கூறியுள்ள தெனாலி, சமந்தா தன்னுடைய பிரதியுஷா அறக்கட்டளை மூலம் செய்துவரும் பல்வேறு சமூக நலப்பணிகள் தன்னை மிகவும் கவர்ந்ததால், அவருடைய ரசிகர் ஆனதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

மேலும் சமந்தாவை இவர் இதுவரை நேரில் ஒருவரை கூட பார்த்தது கிடையாதாம். ஆனால், சமந்தாவிற்கு நோய் பாதிப்பு ஏற்பட்ட போது அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று திருப்பதி கோவிலுக்கு எல்லாம் சென்று பிரார்த்தனை செய்திருக்கிறார் தெனாலி சந்திப் மேலும் சமந்தாவின் பிறந்தநாளில் இந்த சிலையை திறக்க இருப்பதாக சொன்ன தெனாலி, சொன்னபடியே இன்று சமந்தாவின் பிறந்தநாளில் இந்த சிலையை திறந்துள்ளார்.

Advertisement