நடிகர் ரஜினிகாந்துக்கு ரசிகர் ஒருவர் வைத்து இருக்கும் கோரிக்கை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 80 காலகட்டம் துவங்கி தற்போது வரை ‘சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்துடன் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார் ரஜினிகாந்த். இவர் தன்னுடைய திரை பயணத்தில் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார்.

அந்த வகையில் கடந்த ஆண்டு இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினி நடித்து இருந்தார். இந்த படத்தில் மோகன் லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார், விநாயகம் என்று பலர் நடித்து இருந்தனர். இந்த படம் தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என்று பேன் இந்தியா அளவில் வெளியாகி வெற்றியை கண்டது. அதோடு மிகப்பெரிய அளவில் இந்த படம் வசூல் சாதனையும் செய்து இருந்தது.
ரஜினி திரைப்பயணம்:
ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினியின் ‘வேட்டையன்’ படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கி இருந்தார். இந்த படத்தில் இந்தி நடிகர் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உட்பட பலர் நடித்து இருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதை அடுத்து ரஜினியின் 171வது படமான ‘கூலி’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

கூலி படம்:
‘கூலி’ படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். நீண்ட வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணைந்து சத்யராஜ் இந்தப் படத்தில் நடிக்கிறார். இதனாலே ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன், சௌபின் சாஹிர், உபேந்திரா, நாகர்ஜூனா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
ரஜினி குறித்த தகவல்:
தற்போது இந்த படத்தினுடைய படப்பிடிப்பு முமரமாக நடைபெற்று வருகிறது. இதை அடுத்து இன்னும் சில படங்களில் ரஜினி கமிட்டாகி இருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, ரஜினிகாந்துக்கு தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் ரசிகர் ஒருவர் ரஜினிகாந்த்துக்கு வைத்திருக்கும் வேண்டுகோள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆடியோவில் "உங்களை ஒருநாள் சந்திக்கிற கண்ணா" என்று சொன்னீர்கள் தலைவா அதற்குப் பின்பு சந்திப்பு நடக்கவில்லை.. இப்போது ராகவேந்திரா சிலையும் மகா அவதார் பாபாஜி சிலையும் செய்து வைத்திருக்கிறேன் உங்களை சந்திப்பதற்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் தலைவா..🙏❤️(2/2)#Rajinikanth #Coolie #Jailer2 pic.twitter.com/pUSuzSGdvY
— Rajini Ranjith Poolavadi (@Ranjith1791995) February 15, 2025
ரசிகர் வைத்த வேண்டுகோள்:
அதாவது, அந்த ரசிகர் ராகவேந்திரா சிலையையும், பாபாஜி சிலையையும் செய்து வைத்த புகைப்படத்தை பதிவிட்டு, ஆடியோவில் உங்களை ஒருநாள் சந்திக்கிறேன் கண்ணா என்று சொன்னீர்கள் தலைவா. அதற்குப்பின் நீங்கள் சந்திக்கவே இல்லை. இப்போது ராகவேந்திரா சிலையையும், மகா அவதார் பாபாஜி சிலையும் செய்து வைத்திருக்கிறேன். உங்களை சந்திப்பதற்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் தலைவா என்று கூறியிருக்கிறார். தற்போது இவருடைய பதிவு தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.






