நடிகர் பிரபாஸின் கன்னத்தில் அவரது ரசிகை ஒருவர் எதிர்பாராத நேரத்தில் அறைந்த விடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்தியாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவர் பிரபாஸ். இவர் நடிப்பில் வந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அதிலும், 2015 ஆம் ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி படம் இந்திய அளவில் பிரபலமானது. தற்போது பான் இந்தியா படமாக பிரபாஸ் நடிப்பில் வெளியாகி உள்ள ஆதிபுருஷ் ராமாயணம் பற்றிய கதை.
ராமாயணம் கதையை மையக்கமாக வைத்து பல படங்கள் எடுக்கப்பட்டாலும், இதுவரையில் எந்த படமும் தற்போது உள்ள நவீன தொழில் நுட்பத்தை தற்போது எடுக்கவில்லை. இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. அதோடு பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிப்பதினால் எதிர்பார்ப்பு இன்னமும் அதிகமானது. மேலும், இந்த ஆதிபுருஷ் திரைப்படமானது இராமாயணத்தில் வரும் யுத்த காண்டம் பற்றிய கதையாகும். ராமனாக பிரபாஸும் , சீதையாக கிருதி சனோனும், ராவணனாக சயீப் அலி கான் நடித்திருக்கிறார்கள்.
படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை சந்தித்து இருக்கிறது. இந்நிலையில் நடிகர் பிரபாஸ் அடுத்து நடக்க உள்ள “புராஜெக்ட் கே” என்ற படமும் புராண கதையை சொல்லும் படமாக இருக்கும் என்று தெலுங்கு திரையுலக வட்டாரங்களில் கூறப்படுகிறது. கிடைத்துள்ள தகவல்களில் படி கடவுள் மகாவிஷ்ணுவின் கடைசி அவதாரமான கல்கி அவதாரத்தை வைத்து எடுக்கப்படும் கடைசி அவதாரத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் படம் என்றும் இதில் நடிகர் பிரபாஸ் விஷ்ணுவாக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
கல்கி 2898 ஏடி:
அடுத்ததாக நடிகர் கல்கி 2898 ஏடி என்ற படத்தில் நடிக்க உள்ளார். புராஜெக்ட் கே என்று அழைக்கப்பட்டு வந்த அந்தப் படத்தின் பெயர் என்னவாக இருக்கும் என பலரும் எதிர்பார்த்திருந்தனர். இந்தச் சூழலில் அமெரிக்காவின் சான் டியாகோவில் நடந்த காமிக் கான் நிகழ்ச்சியில் படத்தின் பெயர் கல்கி 2898 ஏடி என அறிவிக்கப்பட்டு வீடியோவும் வெளியிடப்பட்டது. முதலில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானபோது கடுமையாக ட்ரோல் செய்த ரசிகர்கள் க்ளிம்ப்ஸ் வீடியோவை பார்த்து நல்ல வரவேற்பு கொடுத்தனர்
கன்னத்தில் அறைந்த ரசிகர்:
நடிகர் பிரபாஸ் ஏர்போர்ட்டில் நடந்து கொண்டு வந்திருக்கும் போது அவருடைய ரசிகை ஒருவர் கன்னத்தில் நடந்த அந்த வீடியோ வந்து தற்போது என்ன சமூக வலைத்தளங்களை பரப்பி வருகிறது அந்த வீடியோவில் முதலில் பெண் ரசிகை ஒருவர் அவரிடம் புகைப்படம் அவரிடம் புகைப்படம் ஒன்றை இதில் எடுத்துக் கொண்டார். அதன் பின் மிகுந்த மகிழ்ச்சி அடைந்த அந்த ரசிகை திடீரென நடிகர் பிரபாஸ் கன்னத்தில் அறைந்து விட்டு ஒரு ஓடிவிட்டார். அப்போது பிரபாஸ் என்ன செய்தவேதன்று அறியாமல் நின்று கொண்டு இருந்தார். இந்த வீடியோவை அது தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.