முகமூடி பட நடிகையை சந்திக்க நடைபாதையில் உறங்கி 5 நாட்கள் காத்திருந்த ரசிகர். அட்வைஸ் செய்து அனுப்பிய நடிகை. வைரலாகும் வீடியோ.

0
4788
pooja-hedge
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகை பூஜா ஹெக்டே. இவர் 2010 ஆம் ஆண்டு நடை பெற்ற மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இதனை தொடர்ந்து நடிகை பூஜாவுக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் வந்தன. இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடித்து வெளி வந்த படம் முகமூடி. இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து இருந்தார். இந்த படம் பெரிய அளவில் பேசப்படவில்லை. அதோடு இது தான் நடிகை பூஜா ஹெக்டே கடைசியாக நடித்த தமிழ் படம். இந்த படத்திற்கு பிறகு நடிகை பூஜா ஹெக்டேவுக்கு தமிழில் வாய்ப்பு கிடைக்காததால் பிற மொழிகளில் கவனம் செலுத்தி வந்தார். நடிகை பூஜா ஹெக்டே நடிப்பில் தெலுங்கில் வரும் படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட். தெலுங்கில் இவருக்கென்று ஒரு தனி மார்க்கெட் உள்ளது என்று சொல்லலாம்.

-விளம்பரம்-

மேலும், தெலுங்கில் இவருக்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. தற்போது நடிகை பூஜா ஹெக்டே அவர்கள் இந்தி படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக இவர் அல்லு அர்ஜூனுடன் இணைந்து ’ஆல வைகுந்தபுர்ரமுலோ’ என்ற படத்தில் நடித்தார். இந்தப் படமும் பொங்கல் விருந்தாகாக திரைக்கு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் தெலுங்கு ரசிகர் ஒருவர் நடிகை பூஜா ஹெக்டேவை நேரில் பார்க்க ஐந்து நாட்களுக்கு மேல் சாலையோரம் படுத்து உறங்கி உள்ளார். தற்போது இந்த தகவலை நடிகை பூஜா அவர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளார். சோசியல் மீடியாவில் இது வைரலாக பரவி வருகிறது.

இதையும் பாருங்க : முதன் முறையாக ஒன்றாக இணைந்து பேட்டி அளித்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் – சித்ரா.

- Advertisement -

நடிகை பூஜா ஹெக்டே அவர்கள் மும்பையில் வசித்து வருகிறார். நடிகை பூஜையைப் பார்க்க ஆந்திராவில் இருந்து மும்பைக்கு வந்து 5 நாட்களாக காத்திருந்து சாலையோரம் படுத்து தூங்கி உள்ளார் பாஸ்கர் ராவ் என்கிற அந்த ரசிகர். அந்த ரசிகர் 5 நாட்களாக நடிகை பூஜா ஹெக்டேவுக்காக காத்து இருப்பதை அறிந்து நடிகை பூஜா அந்த ரசிகரை நேரில் சந்தித்து உள்ளார். பின் அவர்கள் இருவரும் பேசும் போது எடுக்கப்பட்ட வீடியோவை சோசியல் மீடியாவில் பகிர்ந்து உள்ளார். அந்த வீடியோவில் அந்த ரசிகருக்கு நன்றி தெரிவித்துள்ள நடிகை பூஜா ஹெக்டே இனி ரோட்டில் உறங்காதீர்கள் வீட்டிற்கு செல்லுங்கள் என்று அட்வைஸ் செய்துள்ளார். . மேலும், நடிகை பூஜா அவரை சந்தித்த போது பேசிய வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் அதில் அவர் கூறியது, என்னை பார்க்க மும்பை வரை வந்து 5 நாட்களாக காத்திருந்ததற்கு மிக்க நன்றி. என்னுடைய ரசிகர்கள் இப்படி கஷ்டப்படுவது எனக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. என்னை பார்க்க நீங்கள் ரோட்டில் தங்கி காத்திருக்க நான் விரும்பவில்லை. நீங்கள் எங்கிருந்தாலும் உங்களின் அன்பை நான் உணர்கிறேன். நீங்கள் தான் என்னுடைய பலம். உங்கள் மூலம் தான் நான் இந்த அளவிற்கு வளர்ந்த இருக்கிறேன். ‘லவ் யூ ஆல்’ என்று தெரிவித்து உள்ளார். பூஜா ஹெக்டே அடுத்ததாக பிரபாஸுடன் இணைந்து ஜான் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படம் தெலுங்கு மற்றும் இந்தியில் உருவாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடக்க உள்ளதாக குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement