முதன் முறையாக ஒன்றாக இணைந்து பேட்டி அளித்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் – சித்ரா.

0
30912
pandiyan-stores
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல்களில் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பும்,பாராட்டும் பெற்று வருகிறது. அதிலும் ‘முல்லை- கதிர்’ கதாபாத்திரத்தில் சித்ரா, குமரன் நடித்து வருகிறார்கள். மேலும், இவர்கள் இருவரும் கூட இந்த சீரியலில் வெற்றிக்கு ஒரு காரணம் என்று கூட சொல்லலாம். அதுமட்டுமில்லாமல் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கமிட்டாகி அடுத்த சில மாதங்களிலேயே இவங்க ரெண்டு பேரும் ஜோடி நிகழ்ச்சியில் இணைந்து நடனம் ஆடினார்கள். ஆனால், அந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவர்களுக்கு உள்ள என்ன நடந்துச்சுன்னு தெரியல ரெண்டு பேருமே எந்த நிகழ்ச்சியிலும் ஜோடியாக கலந்து கொள்ளவில்லை.

-விளம்பரம்-
Image result for mullai kathir

- Advertisement -

அதிலும் இவர்கள் இருவரில் இருந்து ஒருவர் சீரியலை விட்டு விலக போறாங்கள் என்று கூட இணையங்களில் வதந்தியை கிளப்பினார்கள். இப்படி சித்ரா,குமரன் இடையே நடந்த பிரச்சனையெல்லாம் வதந்தி, சீரியல் விளம்பரத்திற்காக செய்தது என்று கூறி இருந்தார்கள். இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் குமரன், அதில் சித்ராவுடன் இருப்பதை காண்பித்து தங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருந்தார். அதே போல சித்ராவும் பேட்டி ஒன்றில் குமரனுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறியிருந்தார்.

இதையும் பாருங்க : அதற்கு பின்னர் தான் புடவை உடுத்த துவங்கினேன். ரகசியத்தை சொன்ன பேபி அனிகா.

இதனால் குமரன் சித்ரா ரசிகர்கள் கொஞ்சம் நிம்மதி அடைந்தாலும் இவர்கள் இருவரும் பேட்டி கொடுக்காததை எண்ணி கொஞ்சம் வருத்தத்தில் இருந்து வந்தனர். இந்த தொடர் ஆரம்பித்து 300 எபிசோடுகளை கடந்து விட்டது, அதாவது இந்த தொடர் ஆரம்பித்து ஓராண்டிற்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், இதுவரை குமரன் மற்றும் சித்ரா இருவரும் இணைந்து ஒரு முறை கூட பேட்டி கொடுக்காமல் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு முதன்முறையாக குமரன் மற்றும் சித்ரா இருவரும் இணைந்து பேட்டி கொடுத்திருக்கிறார்கள். மேலும், அந்த வீடியோவில் இதுவரை ஏன் ஒன்றாக இணைந்து பேட்டி கொடுக்கவில்லை என்று கூறியுள்ளார்கள்.

-விளம்பரம்-

வீடியோவில் 6:20 நிமிடத்தில் பார்க்கவும்

அந்தப் பேட்டியில் பேசியுள்ள, குமரன் மற்றும் சித்ரா ஆரம்பத்தில் இருவரும் சூட்டிங்கில் மிகவும் பிசியாக இருந்தார்களாம். அதுமட்டுமல்லாமல் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ஆரம்பித்தவுடனேயே ஜோடி நிகழ்ச்சி ஆரம்பித்ததால் அதில் பிசியாகிவிட்டார்களாம். ஒருபுறம் குமரன், ஜோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் டப்பிங்கிற்கு சென்று விடுவாராம். அதேபோல சித்ரா, ஜோடி நிகழ்ச்சியை முடித்துவிட்டு பல்வேறு ஈவண்ட்களுக்கு சென்று விடுவாராம். அதேபோலதற்போது இவர்கள் அளித்த பேட்டி கூட இதற்கு முன்னால் இரண்டு முறை திட்டமிடப்பட்டது. ஆனால் தற்போதுதான் ஒன்றாக பேட்டி கொடுக்க நேரம் கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார்கள்.

Advertisement