மஹத் பாலியல் செயல்கள்..! வைஷ்ணவி வெளியிட்ட உண்மை..! அந்தர் பல்டி அடித்த வைஷ்ணவி

0
258
mahat

சமீபத்தில் மஹத் குறித்து வைஷ்ணவியிடம் ட்விட்டர் வாசிகள் சில கேள்விகளை கேட்டு வந்தனர். அப்போது ட்விட்டர் வாசி ஒருவர் ‘மஹத் வளர்ந்து விட்டாலும் அவர் குழந்தை தனமாகவும், முதிர்ச்சி இல்லாமலும் நடந்து கொள்கிறார் என்று தான் நான் நினைக்கிறேன். சென்ராயன், டேனி போன்று மஹத் கஷ்டத்தில் இருந்து வந்தவர் இல்லை.

மஹத் பெண்களை மதிக்காதவர் என்று தான் நான் எண்ணுகிறேன். உபயோகித்து விட்டு பின்னர் அசிங்கபடுத்திவிட்டு மன்னிப்பு கேட்டு விடுகிறார். இதை தவிர வேறு ஒன்றும் அவரிடம் எதிர்பார்க்கமுடியாது.” என்று பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவிற்கு ரீ- ட்வீட் செய்திருந்த வைஷ்ணவி ” நான் ஒப்புக் கொள்கிறேன். அவர்(மஹத்) எதார்த்தமான பாலியல்(sexism) செயல்களில் ஈடுபட்டுள்ளார். மேலும், அவர் என்னிடம் மிகவும் கடுமையாக நடந்து கொண்டுள்ளார். அவருக்கு 32 வயதிற்கு தேவையான முதிர்ச்சி இல்லை என்று தான் நான் நினைக்கிறேன் ” என்று பதிவிட்டுள்ளார்.

மஹத்தை பற்றி பல பேர் அவர் மெண்டல் என்றும் சைக்கோ என்றும் குறிப்பிட்டிருந்தனர். ஆனால் வைஷ்ணவி, மஹத்தை பாலியல்(sexism) என்ற வார்த்தையை பயன்படுத்தி விமர்சித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இதுகுறித்து மற்றொரு பதிவில் விளக்கமளித்துள்ள வைஷ்ணவி “பாலியல்(sexism) என்ற வார்த்தைக்கு முதலில் அர்த்தம் புரிந்துகொள்ளுங்கள். எதனையும் பரபப்பற்காக எழுதாதீர்கள்” என்று அந்தர் பல்டி அடித்தார் வைஷ்ணவி.