முத்தம் கொடுக்க வந்த ரசிகர். கடுப்பான மோகன் லால். வீடியோ இதோ.

0
608
mohan

சினிமா பிரபலங்கள் வெளியில் சென்றால் அவர்களை ரசிகர்கள் சூழ்ந்து அன்புத் தொல்லை செய்வது வழக்கமான ஒரு விஷயம் தான். அதிலும் ஸ்டார் நடிகர்கள் என்றால் சொல்லவா வேண்டும். இதனாலேயே பெரும்பாலான பெரிய நடிகர்கள் பொது நிகழ்ச்சிகளுக்கு செல்வதை பெரும்பாலும் தவிர்த்து விடுகின்றனர். அதை மீறி வெளியில் வந்தாலும் ஒரு சில சமயங்களில் ரசிகர்களின் செயலால் கடுப்பாகி விடுகின்றனர். அப்படிபட்ட சம்பவம் தான் இதுவும்.

சினிமா பிரபலங்கள் வெளியில் வந்தால் ரசிகர்களின் சில செயல்களால் கோபபட்டுள்ளதை பார்த்துள்ளோம், அவ்வளவு ஏன் ரசிகர்கள் செல்ஃபி எடுக்க வந்தால் அவர்களின் செல் போனை தட்டிவிடும் நடிகர்கள் கூட தமிழ் சினிமாவில் இருக்கின்றனர். ஆனால், மலையாளத்தில் டாப் நடிகர்களுள் ஒருவரான மோகன் லாலும் ரசிகரின் செயலால் கடுப்பாகி உள்ளார்.

- Advertisement -

தமிழ் சினிமாவில் எண்ணற்ற மலையாள நடிகர்கள் கால் பதித்திருக்கின்றனர். மம்முட்டி தொடங்கி துல்கர் சல்மான் வரை பல மலையாள நடிகர்கள் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சயம் தான். அந்த வகையில் மலையாள சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன் லாலும் ஒருவர்.தமிழில், இருவர், ஜில்லா போன்ற படங்களில் நடித்த மோகன் லால் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

Mohanlal direction: Mohanlal said that being a director would help ...

சமீபத்தில் சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ ஒன்று வெளியானது, மோகன் லாலை பல்வேறு ரசிகர்கள் சூழ்ந்து இருக்கின்றனர். அப்போது ரசிகர் ஒருவர் மோகன்லாலுக்கு முத்தம் கொடுக்க அவரது கிட்டே செல்கிறார், உடனே மோகன்லால் கொஞ்சம் கோபமாக அவரை பார்க்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. ஆனால், இந்த வீடியோ எங்கே ? எப்போது எடுக்கப்பட்டது என்பது தான் தெரியவில்லை.

-விளம்பரம்-
Advertisement