திடீரென்று குஷ்புவிடம் வலிமை அப்டேட்டை கேட்கும் ரசிகர்கள். காரணம் என்ன தெரியுமா ?

0
1318
kushboo
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் 90 கால கட்டங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்தவர் நடிகை குஷ்பு. இவர் முதன் முதலாக 1980களில் குழந்தை நட்சத்திரமாக தான் தன்னுடைய திரைப்பட பயணத்தைத் தொடங்கினார். பின் 1990 களில் தமிழ் திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகியாக அவதாரம் எடுத்தார். இன்றளவும் நமது மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார். இவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழிகளில் நடித்து உள்ளார். தற்போது குஷ்பூ அவர்கள் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகிறார். மேலும், இவர் ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடித்து நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

இந்நிலையில் ரசிகர்கள் அனைவரும் நடிகை குஷ்பு அவர்களிடம் வலிமை படத்தின் அப்டேட் குறித்து கேட்டு வருகிறார்கள். அதற்கு காரணம் என்னவென்றால், குஷ்பு அவர்களும், வலிமை படம் தயாரிப்பாளர் போனி கபூர் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் வலிமை படத்தின் அப்டேட் குறித்து நீங்களாவது கொடுங்களேன் என்று கெஞ்சி கேட்டு வருகிறார்கள். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும், வலிமை படத்தின் படப்பிடிப்பு ரகசியமாக நடந்து வருகிறது.

- Advertisement -

உலகம் முழுவதும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் தல அஜித். எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய கடின உழைப்பினால் தமிழ் சினிமாவில் தன்னுடைய ஒரு இடத்தை பிடித்து உள்ளார். தல அஜித் அவர்கள் தற்போது வலிமை படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் வினோத் இயக்குகிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்து இந்த நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய அதே குழுவினரே அஜித்தின் வலிமைப் படுத்திலும் பணியாற்றுகிறார்கள். மேலும், படத்திற்கு ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இந்த படத்தில் தல இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்றும் பேசப்படுகிறது.

This image has an empty alt attribute; its file name is image-3.png

-விளம்பரம்-

இந்த வலிமை படத்தில் அஜித் அவர்கள் பிளாக் ஹேர் ஸ்டைலில் அதுவும் இளமை தோற்றத்தில் காட்சி அளிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் தல அஜித் அவர்கள் போலீசாக நடிக்கிறார். படத்தின் வேலைகள் எல்லாம் மும்முரமாக போய் கொண்டு உள்ளது. இந்த படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளும், இந்த ரேஸ் காட்சிகளும் கண்டிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வலிமை படத்தின் படப்பிடிப்பு தளத்தில் அஜித் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது. காயங்கள் ஆனாலும் அஜித் அவர்கள் அந்த காட்சியை நடித்துக் கொடுத்து விட்டுத் தான் சென்றார். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்கில் வெளியிடப்போவதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளனர்.

Advertisement