கோலா விளம்பரத்தில் நடித்துவிட்டு கோலாவுக்கு எதிராக பிரச்சாரம் – ரொனால்டோ மற்றும் விஜய்யை ஒப்பிடும் நெட்டிசன்கள்.

0
1168
vijay
- Advertisement -

பத்திரிகையாளர் சந்திப்பின் போது கோகோ – கோலா பாட்டில்களை கொஞ்சம் தள்ளி வைத்ததால் அந்த நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. உலக கால்பந்து விளையாட்டில் ஜாம்பவான்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.  2020 ஆம் ஆண்டிற்கான யூரோ கோப்பை கால்பந்து போட்டிகள் கடந்த வாரம் ஐரோப்பாவில் தொடங்கியது. கடந்த 15 ஆம் தேதி இந்த தொடரில்  நடப்பு சாம்பியனான கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் ஹங்கேரி அணியும் மோதினர். 

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-39.png

இந்த போட்டிக்கு முன்பாக காலையில் நடக்கும் வழக்கமான பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. யூரோ கோப்பையின் முக்கிய ஸ்பான்சரான கோக்க-கோலாவின் இரண்டு பாட்டில்கள் பத்திரிகையாளர் சந்திப்புகளில் பேட்டியளிப்பவருக்கு முன்பாக வைக்கப்படுவது வழக்கம். ஆனால், தனக்கு முன்னாள் கோக்க-கோலாவின் பாட்டில்கள் வைக்கப்பட்டு இருப்பதை கண்ட கிறிஸ்டியானோ ரொனால்டோ கோக்க-கோலா பாட்டில்களையும்  எடுத்து கீழே மறைத்துவைத்த ரொனால்டோ, தண்ணீர் பாட்டிலை கையில் எடுத்து ‘’தண்ணீர் குடியுங்கள்’’ என்றார்.

இதையும் பாருங்க : கௌதமிக்கு பதிலா இந்த நடிகைய போட்டுக்கலாம் – பாபநாசம் 2வில் கமலை நடிக்கவைக்க சமாதானம் செய்யும் ஸ்ரீபிரியா.

- Advertisement -

ரொனால்டுவின் இந்த செயலால் பெரும் சர்ச்சை எழுந்தது.60 ஆண்டுகளுக்கும் மேலாக யூரோ கோப்பையின் ஸ்பான்சராக இருக்கும் கோக்க-கோலாவின் பிராண்டை அவமதிக்கும் வகையில் செயல்பட்டுவிட்டார் என்பதால் ரொனால்டோ மீது யூரோ கோப்பை அமைப்பு அபராதம் விதிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ரொனால்டோவின் இந்த செயலால் கோக கோலாவின் ஷேரின் மதிப்பு மலமலவனே சரிந்துள்ளது.

இதனால் கோக கோலா நிறுவனத்திற்கு இந்திய ரூபாய் மதிப்பில் 29,337 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், கோக கோலாவை எதிர்க்கும் ரொனால்டோ ஏற்கனவே கோக கோலா விளம்பரத்தில் நடித்தவர் தான். இதே போல தான் நடிகர் விஜய்யும் கோலா விளம்பரத்தில் நடித்துவிட்டு கத்தி படத்தில் கோலா நிறுவனத்திற்கு எதிராக வசனம் பேசி இருப்பார். தற்போது இந்த ரெண்டு சம்பவத்தையும் ஒப்பிட்டு பல மீம்கள் உலா வருகிறது.

-விளம்பரம்-
Advertisement