விக்னேஷ் சிவன் நயன் படபிடிப்பில் பாதுகாப்பு தீவிரம் – காரணம் இதுதான்.

0
686
nayanthara-vignesh
- Advertisement -

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் பாதுகாப்பு தீவிரமடைந்துள்ளது. தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஹாட் காதல் ஜோடிகளாக திரையுலகில் வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர். விக்னேஷ் சிவனுக்கு முன்பாக நயன்தாரா சிம்பு மற்றும் பிரபுதேவாவை காதலித்து நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் ஆனால் இந்த இரண்டு காதலை விட நயன்தாரா விக்னேஷ் சிவன் உடனான காதலில் தான் மிகவும் உறுதியாக இருந்து வருகிறார். மேலும் ,நடிகை நயன்தாரா எங்கு சென்றாலும் தனது காதலர் விக்னேஷ் சிவனை விட்டு செல்வதே இல்லை.

-விளம்பரம்-
kaathu-vaakula-rendu-kadhal-shooting-commenced

இத்தனை பிசியிலும் நடிகை நயன்தாரா தனது காதலருடன் ஊர் சுற்றுவதை மட்டும் தவறுவதே இல்லை. அடிக்கடி வெளிநாட்டிற்கு பறந்து செல்லும் இந்த ஜோடிகள் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு தங்களது காதலை ரசிகர்களுக்கு அப்டேட் செய்து விடுகின்றனர்.கடந்த சென்ற கிறிஸ்மஸ் கொண்டாட்டம், நியூ இயர் கொண்டாட்டம், நயன்தாராவின் பிறந்தநாள் கொண்டாட்டம் என்று அனைத்தையும் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டில் கொண்டாடினார். ஆனால், இவர்களின் இருவர் திருமணம் எப்போது என்பது தான் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வரும் ஒரு விஷயம்.

- Advertisement -

நடிகை நயன்தாரா ஆரம்பத்தில் டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வந்த நயன் பின்னர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் அதேபோல இவர் லீடு ரோலில் நடித்த படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.இப்படி ஒரு நிலையில் நடிகை நயன்தாரா, தனது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. இப்படி ஒரு நிலையில் சென்னையை அடுத்த தாம்பரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டு வசதிவாரிய குடியிருப்பில் இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று நடைபெற்றது.

அதில், நடிகை நயன்தாரா சம்பந்தப்பட்ட சில முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன.படப்பிடிப்பு தளத்தில் நயன்தாரா இருக்கும் தகவலறிந்த அந்தப் பகுதி மக்கள், அங்கே பெரிய அளவில் திரண்டனர். குறிப்பாக, இளைஞர்கள் கூட்டம் அதிகமாகத் திரண்டதால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் படக்குழுவினர் திணறினர். இதனையடுத்து, படக்குழு சார்பில் நியமிக்கப்பட்டிருந்த பாதுகாவலர்களுக்கும் அங்கே திரண்டிருந்தவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, வாக்குவாதமாக நீண்டது. இதனால், வரும் நாட்களில் பாதுகாப்பு பணிகளுக்காக கூடுதலான ஆட்களை நியமிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றன சினிமா வட்டாரங்கள். 

-விளம்பரம்-

Advertisement