கொடி ஏற்றிவிட்டு கையசைத்த விஜயகாந்த். கண்கள் கலங்க “கேப்டன், கேப்டன்” என உருக்கமாக கத்திய தொண்டர்கள்.

0
762
விஜயகாந்த்
- Advertisement -

கட்சி அலுவலகத்தில் தேசிய கொடியேற்றிய விஜயகாந்தின் நிலையை பார்த்து தொண்டர்கள் கதறி அழும் வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நாடு முழுதும் இன்று 75-வது ஆண்டு சுதந்திர தின விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுதல், புராதன சின்னங்களில் தேசியக் கொடியை ஒளிர விடுதல் போன்றவைகள் கடைபிடிக்கப்பட்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் சோசியல் மீடியா முழுவதிலும் தேசிய கொடியை முகப்பு படமாக வைக்க வேண்டும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி என்று கோரிக்கை வைத்து இருந்தார். இதை தொடர்ந்து ரஜினி, விஜய், இளையராஜா, நடிகர் மோகன்லால், மம்முட்டி, சுரேஷ் கோபி, பாடகி சித்ரா, இயக்குனர் செல்வராகவன், இயக்குனர் மோகன்ஜி, நிர்மலா சீதாராமன் உட்பட பல பிரபலங்கள் தங்களுடைய சோசியல் மீடியாவில் முகப்பு புகைப்படங்களை தேசியக் கொடியாக மாற்றி இருந்தனர்.

- Advertisement -

75-வது ஆண்டு சுதந்திர தின விழா:

நாடு முழுவதும் ஆகஸ்ட் 13 முதல் 15 ஆம் தேதி வரை ஒவ்வொருவரின் வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். இது நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக இருக்கும் வகையில் மோடி கூறியிருந்தார். அந்த வகையில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது இல்லங்களில் தேசிய கொடியை ஏற்றி தங்கள் தேசப்பற்றை காண்பித்து இருந்தனர். நடிகர் ரஜினிகாந்த் வீட்டு முன்பு தேசியக்கொடி ஏற்றப்பட்டு இருக்கிறது.

தேசியக்கொடி ஏற்றிய பிரபலங்கள்:

இதேபோல் பனையூரில் உள்ள விஜய்யின் மக்கள் இயக்கம் அலுவலகத்திலும், விஜய் இல்லத்திலும், மம்முட்டி, மோகன்லால்,அர்ஜுன் என்று பல பிரபலங்கள் வீட்டின் முன் தேசியக்கொடி ஏற்றப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் நடிகர் விஜயகாந்த் அலுவகத்தின் முன்பும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு இருக்கிறது. விஜயகாந்த் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து தேசிய கொடியை ஏற்றி தன் கட்சி தொண்டர்களுக்கு கையசைத்து இருந்தார்.

-விளம்பரம்-

விஜயகாந்தின் தொண்டர்கள் அழும் வீடியோ:

அவரை பார்த்து விஜயகாந்தின் தொண்டர்கள் பலரும் கதறி அழுதிருக்கிறார்கள். விஜயகாந்தின் உடல்நிலை குறித்து தொண்டர்கள் வேதனைப்பட்டு அழும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் கேப்டன் என்ற அந்தஸ்துடன் ஒரு காலத்தில் உச்ச நடிகராக திகழ்ந்தவர் விஜயகாந்த். தன்னுடைய நடிப்புத் திறமை மூலம் திரை உலகில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியிலும் இவர் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர்.

விஜயகாந்த் உடல்நிலை:

மேலும், ரஜினி, கமல் போன்ற உச்ச நடிகர்களுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு தமிழ் சினிமா உலகில் முத்திரை பதித்து இருந்தவர் விஜய்காந்த். அதற்குப்பின் அவர் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். பிறகு விஜய்காந்த் முழு நேர அரசியலில் களமிறங்கி இருந்தார். அது மட்டுமில்லாமல் சமீப காலமாக அவருக்கு உடல் பிரச்சனைகள் அதிகமாக இருந்ததால் அவரால் படங்களில் நடிக்க முடியாமல் போனது. அதோடு இவர் அடிக்கடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது தே மு க கட்சியை கூட அவரது குடும்பத்தினர் தான் கவனித்து வருகின்றனர்.

Advertisement