என்ன இப்படி ஆகிட்டிங்க – நயன்தாராவின் லேட்டஸ்ட் லுக்கை கண்டு ஷாக்கான ரசிகர்கள்.

0
673
nayanthara
- Advertisement -

நயன்தாராவின் கனெக்ட் படத்தின் புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் விமர்சித்து வரும் பதிவு சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருப்பவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். அதிலும், சமீப காலமாக இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.

-விளம்பரம்-

அதனால் நாட்கள் செல்ல செல்ல இவருடைய ரசிகர்கள் கூட்டமும் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. சமீபத்தில் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நயன் நடித்து இருந்தார். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். பல எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது.

- Advertisement -

நயன்தாரா நடிக்கும் படங்கள்:

இதனைத் தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் வெளியாகி இருந்த படம் O2. இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து நயன் அவர்கள் கனெக்ட், ஜவான், கோல்ட், காட்ஃபாதர், இறைவன் என்று பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனிடையே அனைவரும் எதிர்பார்த்த நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வெகு விமர்சையாக பிரம்மாண்டமாக நடந்தது.

நயன்-விக்கி இரட்டை குழந்தை:

அதன் பின் இருவரும் தங்களுடைய கேரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்து இருப்பதாக விக்னேஷ் சிவன்- நயன்தாரா இருவரும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து இருந்தார்கள். இதற்கு பலரும் வாழ்த்துக்களை கூறி இருந்தார்கள். ஆனால், பலர் கல்யாணம் முடிந்து 4 மாதங்கள் ஆன நிலையில் எப்படி நயன்தாரா குழந்தை பெற்றார்? என்று கேள்வியும் எழுப்பி இருந்தார்கள். இது குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்திருந்தது.

-விளம்பரம்-

கனெக்ட் படம்:

அதற்குப் பிறகு நயன்தாரா – விக்னேஷ் சிவன் தரப்பில் உரிய ஆதாரங்களை மருத்துவரிடம் சமர்ப்பித்து சர்ச்சைக்கு முற்று புள்ளி வைத்து இருந்தார்கள். இந்நிலையில் நயன்தாராவின் புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் விமர்சித்து வரும் பதிவு சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. மாயா, இரவாக்காலம், கேம் ஓவர் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் அஸ்வின் சரவணகுமார் இயக்கத்தில் தற்போது நயன்தாரா நடித்திருக்கும் படம் கனெக்ட். இந்த படத்தில் அனுபம் கெர், சத்யராஜ், வினய், நஃபிசா ஹனியா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு பிருத்வி சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார்.

நயன் படத்தை விமர்சித்த நெட்டிசன்கள்:

விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. மேலும், நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகியிருந்தது. ஹாரர் திரில்லர் பாணியில் இந்த படம் உருவாகி இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த படம் மொத்தமே 95 நிமிடங்கள் என்றும் படத்தில் இடைவேளை இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்த படம் வரும் டிசம்பர் 22ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் டிரைலர் டிசம்பர் ஒன்பதாம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் நயன்தாராவின் கனெக்ட் படத்தின் புகைப்படம் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில் நயன் பார்ப்பதற்கு பேய் மாதிரி மிகவும் மோசமாக இருக்கிறார். என்னடா செஞ்சு வச்சு இருக்கீங்க? இதுவாடா நயன்? என்றெல்லாம் விமர்சித்து நெட்டிசன்கள் பதிவு போட்டு வருகிறார்கள்.

Advertisement