இந்த டைலாக் கேக்குதா சமந்தா – நாக சைதன்யா பட ட்ரைலரால் சமந்தாவை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.

0
304
nagachaithanya
- Advertisement -

தெலுகு சினிமா வட்டாரத்தில் நட்சத்திர ஜோடிகளாக திகழ்ந்து வந்த நாக சைத்னயா – சமந்தா ஜோடியின் பிரிவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களை பெரும் அதிர்ச்சி அடைய செய்தது. மேலும், இவர்கள் இருவரும் பிரிவிற்கு பிறகு தங்களுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். சமந்தா பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். புஷ்பா படத்தில் ஊ சொல்லிறியா என்ற பாடலுக்கு சமந்தா செம்ம குத்தாட்டம் போட்டிருந்தார். இந்த பாடலின் மூலம் சமந்தா ஒட்டுமொத்த இளைஞர்களின் மனதையும் கவர்ந்தார் என்று சொல்லலாம். பின் இவர் திரில்லர் கதை களம் கொண்ட படம், ஹாலிவுட் படம், சாகுந்தலம், யசோதா போன்று பல படங்களில் சமந்தா மிரட்டிக் கொண்டு வருகிறார்.

-விளம்பரம்-

அதேபோல் நாக சைதன்யாவும் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். சமீபத்தில் நாக சைதன்யா அவர்களின் இரண்டாவது திருமணம் குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. தற்போது அவருக்கு தீவிரமாக பெண் பார்த்து வருகிறார்களாம். இந்த நிலையில் நாக சைதன்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நன்றி தெரிவித்து பதிவு ஒன்று போட்டு இருந்தார்.

- Advertisement -

அதில் அவர், தன்னுடைய அம்மா லட்சுமி டகுபதி, அவரது அப்பா நாகார்ஜுனா மற்றும் சமந்தா-நாகா சைதன்யா செல்லப் பிராணி ஹாஷ் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைபதிவிட்டு இருந்தார். அதில், அம்மா- என்னை வேரூன்ற வைத்திருப்பதற்கும், எந்த நிபந்தனையுமின்றி அவரை நேசித்ததற்கும் அம்மாவுக்கு நன்றி. அப்பா நாக சைதன்யா- என்னுடைய நண்பர் போன்றவர். செல்லப்பிராணி ஹாஷ்- எப்படி நேசிக்க வேண்டும் என்பதை என்னை உணரச் செய்ததற்காக, என்னை மனிதனாக வைத்ததற்காக நன்றி என்று தெரிவித்திருக்கிறார்.

சைதன்யாவும், சமந்தாவும் ஹாஷ்க்கு செல்ல பெற்றோர்களாக இருந்தார்கள். இப்போது ஹாஷ் முன்னாள் தம்பதியினர் முன்பு இருந்த குடியிருப்பில் சமந்தாவுடன் வசித்து வருகிறது. இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் ஒரு நாய் குட்டியை சைதன்யா இவ்வளவு மிஸ் பண்ணும் போது நிச்சயமாக சமந்தாவை மிஸ் செய்வார் என்று கமெண்டுகளை பதிவிட்டு வந்தனர்.இப்படி ஒரு நிலையில் சமந்தாவை குறிப்பிடும் வகையில் நாக சைதன்யாவின் ‘தேங்க் யூ’ பட ட்ரைலரில் வசனம் ஒன்று இடம்பெற்று இருப்பதாக ரசிகர்கள் பலர் கூறி வருகின்றனர்.

-விளம்பரம்-

தமிழில் சூர்யா நடித்த ’24’ படத்தை இயக்கிய விக்ரம் குமார் இயக்கத்தில், தமன் இசையமைப்பில், பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவில், நாக சைதன்யா, ராஷி கண்ணா, ‘குக்கூ’ படக் கதாநாயகி மாளவிகா நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. அந்த டிரைலரில் உள்ள ஒரு வசனத்தில், “உறவில் இருக்கும் ஒருவரைக் கட்டுப்படுத்தும் காதலை விட, விட்டுக் கொடுக்கும் காதல் சிறந்தது” என இருக்கிறது.

காதல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலரில் உள்ள இந்த வசனம் தான் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது சமந்தா உடனான, நாக சைதன்யாவின் முறிந்து போன காதல் திருமண வாழ்க்கையைப் பற்றிக் குறிப்பிடுவதாக உள்ளது என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே போல இப்படி ஒரு நபரை பிரிய சமந்தாவிற்கு எப்படி மனம் வந்தது என்று சமந்தாவை பல ரசிகர்கள் அந்த ட்ரைலருக்கு கீழ் திட்டி தீர்த்து வருகின்றனர்.

Advertisement