விஸ்வரூபம் படத்திற்கு பின்னர் இந்த படத்தை தான் தமிழ் ராக்கர்ஸ் வெளியிடவில்லை.!

0
570
Viswarupam

ஒரு படத்தை எடுத்து முடிப்பதற்கு இயகுனர்,தயாரிப்பாளர்,நடிகர்கள் மற்றும் பல தொழிநுட்ப கலைஞர்கள் அனைவரும் தங்களது கடின உழைப்பை போட்டு படத்தை எடுத்து முடிக்கிறார்கள். ஆனால் அதனை ஹேக்கிங் என்ற பெயர் மூலம் படம் ரிலீஸ்சாவதற்க்கு முன்பாகவே அந்த படத்தை இணையத்தில் வெளியிட்டுவிடுகின்னர்.

புதிய படங்களை திரைக்கு வருவதற்கு முன்பாகவே அந்த படத்தை பைரேசி மூலம் இனயதளங்களில் வெளியிட்டு விடுகின்றனர். அதில் பல புதிய படங்களை வெளியிடும் ஒரு அமைப்புதான் தமிழ் ராக்கர்ஸ். இவர்கள் புதிய படம் வெளியான ஒரு சில நாட்களில் தங்களது வலைதளத்தில் வெளியிட்டு விடுகின்றனர்.

- Advertisement -

இவர்களை தடுக்க தமிழ் திரைப்பட துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், அவை அனைத்திற்கும் பயனில்லாமல் போனது. அனைத்து ஹீரோக்களின் படங்களை வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க விஸ்வரூபம் 2 திரைப்படத்தை வெளியிடவில்லை.

அந்த வரிசையில் சமீபத்தில் வெளியான ‘உறியடி 2’ திரைப்படத்தை கூட இவர்கள் இணையதளத்தில் வெளியிடவில்லை. இந்த படத்தின் முதல் பாகம் அதிகப்படியான திரையரங்கில் வெளியாகவில்லை. இருப்பினும் இந்த படத்தை திரையரங்கில் பார்க்காத ரசிகர்கள் இரண்டாம் பாகத்தை திரையரங்கில் கண்டு கழித்து வருகின்றனர். மேலும், சமூக பிரச்சனைகளை மையப்படுத்தி வெளியான இந்த படத்தை தமிழ் ராக்கர்ஸ் வெளியிடாததர்க்கு ரசிகர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement