திரௌபதி படத்தைத் தொடர்ந்து இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் தற்போது வெளியாகியுள்ள படம் ருத்ரதாண்டவம். இந்த படத்தில் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்து உள்ளார். இரண்டாவது முறையாக இந்த படத்தில் மோகன், ரிச்சர்ட் இந்த படத்தில் இணைந்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படத்தில் கதாநாயகியாக சின்னத்திரை சீரியல் நடிகை தர்ஷா குப்தா நடித்து உள்ளார்.
வில்லன் கதாபாத்திரத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் மிரட்டி உள்ளார். போதை பழக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகளையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்டது தான் ருத்ரதாண்டவம் படம். இன்றைய சமுதாயத்தில் நிலவும் சாதி பிரச்சனைகளையும், போதைக்கு அடிமையாகும் இளைனர்கள் நிலைமை குறித்தும் இந்த படத்தில் கூறி உள்ளதாக மோகன் கூறி இருந்தார்.
மேலும், இந்த படத்தில் PCR சட்டம் குறித்தும் லேசாக டச் செய்து உள்ளார் மோகன். சினிமா பிரபலங்கள் இந்த படம் குறித்து பாராட்டுகளை குவித்து வருகின்றனர். இந்நிலையில் இப்படம் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக வசூலில் வாரிக் குவித்து வருகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த படம் முதல் மூன்று நாட்களிலேயே 7.5 கோடி வரை வசூல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும் இந்த படத்திலும் குறிப்பிட்ட சமூகத்தினர் தான் போதை பொருள் கடத்துவதாக மோகன் காட்டியுள்ளார் என்ற விமர்சனமும் எழுந்து இருக்கிறது. என்னதான் இந்த திரைப்படம் வெற்றி என்று பலர் கூறினாலும், ஒரு சிலர் இந்த படத்தை வச்சி செய்து தான் வருகின்றனர். அந்த வகையில் இந்த படத்தில் வரும் காட்சி ஒன்றை Oyo ரூம்ஸ்சுடன் முடிச்சி போட்டு கலாய்த்து வருகின்றனர்.
Just monkey என்ற முகநூல் பக்கத்தில் ‘ Oyo உங்கள் செயலி சிறுவர்களுடன் உல்லாசமாக இருக்கபயன்படுத்தப்படுகிறதா? மிகவும் பிரபலமான தமிழ் இயக்குனர் மோகன், இப்படித்தான் அவரது படத்தில் காட்டியிருக்கிறார். உங்களுக்கு வேண்டுமானால் உங்களின் சொந்த ரஸ்கில் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த காட்சியில் : உன்னுடைய மொபைலில் ஓயோ ஆப் இருக்கிறதா. அப்போ நீ அதிலிருந்து ரூம் புக் செய்து வயதுக்கு வராத பெண்ணுடன் உல்லாசமாக இருக்க பார்க்குறியா’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவின் கீழ் பலரும் Oyoவை கலாய்த்து வருகின்றனர்.