கடந்த சில நாட்களுக்கு முன்னர் இதுக்கெல்லாம் அறிக்கை வெளியிட்டாரு – ஆனா எஸ் பி பிக்கு ஒரு அறிக்கை கூட இல்லையே தல ?

0
3439

பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பி உடல்நலக் குறைவால் நேற்று (செப்டம்பர் 25) காலமாய்யுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா நோய் தொற்று உறுதியானதால் கடந்த 5-ம் தேதி, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா தொற்றில் இருந்து அவர் மீண்ட போதும் அவருக்கு ஏற்பட்ட உடல் நிலை கோளாறு காரணமாக நேற்று மதியம் 1.04 மணி அளவில் அவர் உயிரிழந்தாக மருத்துவ குழுவினர் அறிவித்து இருந்தனர்.

Vijay

நேற்று நுங்கம்பாக்கத்தில் இருந்த அவரது வீட்டில் போது மக்கள் அஞ்சலிக்காக உடல் அவரது வைக்கப்பட்டது. அதே போல எஸ் பி பியின் உடல் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்படது. எஸ்.பி.பியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ள தாமரைப்பாக்கம் பண்ணைவீட்டில், ஏற்கெனவே அவரது முன்னோர்களும் அடக்கம் செய்யப்பட்டிருப்பதாக, உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

பாடகர் எஸ் பி பாடகர் என்பதையும் தாண்டி. கேளடி கண்மணி, குனா, திருடா திருடா, காதலன், அவ்வை ஷண்முகி என்று பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். அதே போல விஜய் நடிப்பில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான ‘பிரியமானவளே’ படத்தில் கூட விஜய்யின் அப்பாவாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜய், எஸ் பி பியின் உடலுக்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

Always an inspiration to yougsters – THALA DAA…

நீங்கள் யாரும் அறியாத "தல" அஜித் குமார் அவர்களின் மறுபக்கம் !!!Always an inspiration to yougsters – THALA DAA…

Ajith Back Bones ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಭಾನುವಾರ, ಜೂನ್ 7, 2020

ஆனால், அஜித்தை திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்த எஸ் பி பியின் மறைவிற்கு நடிகர் அஜித் இது வரை ஒரு இரங்கல் அறிக்கையை கூட வெளியிடாதது ரசிகர்கள் பலரையும் அதிருப்த்தியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட தனது பெயரை பலர் தவறாக பயன்படுத்துகிறார்கள் என்றும் படம் சம்மந்தமான விஷயங்களை தனது மேலாளர் மட்டும் தான் பொறுப்பு என்றும் அஜித் அறிக்கை வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement