அவர்கூட இருக்க பிரச்சனைய தீத்துட்டு அவரையும் படத்துல போடுங்க – ரஞ்சித்துக்கு ரசிகர்கள் கோரிக்கை.

0
372
ranjith
- Advertisement -

சந்தோஷ் நாராயணன் உடன் ஏற்பட்ட மோதலின் காரணமாக சார்பட்டா 2 படத்தில் வேறொரு இசையமைப்பாளரை இயக்குனர் ரஞ்சித் மாற்றம் செய்திருக்கும் தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் பா. ரஞ்சித். இவர் முதலில் இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் தான் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தார். பின் இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி என்ற படத்தின் மூலம் தான் இயக்குனராக அறிமுகமானார்.

-விளம்பரம்-

அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நடிகர் கார்த்தியை வைத்து வட சென்னையை கதைக்களமாக கொண்டு மெட்ராஸ் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா போன்ற படங்களை இயக்கி இருந்தார். இவ்விரு படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகி இருந்த சார்பட்டா பரம்பரை படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வெற்றியை பெற்றது.

- Advertisement -

ரஞ்சித் திரைப்பயணம்:

மேலும், இவர் படங்களை இயக்குவது மட்டுமில்லாமல் பல படங்களை தயாரித்தும் இருக்கிறார். சமீபத்தில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்து இருந்த படம் நட்சத்திரம் நகர்கிறது. தற்போது ரஞ்சித் அவர்கள் விக்ரமை வைத்து தங்காலான் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் ரஞ்சித்துக்கும் சந்தோஷ் நாராயணனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சந்தோஷ் நாராயணன்- பா ரஞ்சித் கூட்டணி :

அதாவது, பா. ரஞ்சித் – சந்தோஷ் நாராயணன் இருவரும் நெருங்கிய நண்பர்களாக தமிழ் சினிமாவையே கலக்கி கொண்டிருந்தார்கள். அட்டக்கத்தி படத்தில் தொடங்கிய இவர்களுடைய பயணம் சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேலாக சார்பட்டா பரம்பரை வரை நீடித்தது. அதற்குப்பின் ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு சந்தோஷ் நாராயண இசையமைக்கவில்லை. அதேபோல் தற்போது ரஞ்சித் இயக்கும் படத்தில் சந்தோஷ் நாராயணன் பணியாற்றவில்லை. இது குறித்து கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

-விளம்பரம்-

சார்பட்டா 2 படம் அறிவிப்பு:

இந்த நிலையில் ரஞ்சித் அவர்கள் சில தினங்களுக்கு முன் சார்பட்டா படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார். அதில் இந்த இரண்டாம் பாகத்தில் முதல் பாகத்தில் பணியாற்றிய பிரபலங்களே பணியாற்றுவதாக குறிப்பிட்டு இருந்தார். ஆனால், சந்தோஷ் நாராயணனின் பெயரை மட்டும் அவர் குறிப்பிடவில்லை. இதன் மூலம் சார்பட்டா 2 படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவில்லை என்பது உறுதியாகி விட்டது.

ரசிகர்கள் கோரிக்கை:

ஆனால், இது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றமாக இருந்தது. சார்பட்டா படத்தின் முதுகெலும்பாக இருந்ததே சந்தோஷ் நாராயணனின் இசைதான். இரண்டாம் பாகத்தில் அவர் இல்லாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் ரசிகர்கள் பலரும், தயவு செய்து இருவரும் மீண்டும் இணைந்து பணியாற்றுங்கள் என்று ரஞ்சித்திற்கு கோரிக்கையும் வைத்து வருகின்றனர். இதனால் ரஞ்சித் என்ன முடிவெடுப்பார்? என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

Advertisement