விஜய்யை பார்த்து இதை கற்றுக்கொள்ளுங்கள் ! புகழ்ந்து தள்ளிய நடிகை ஃபரா கான் !

0
2407

தளபதி விஜய் இப்படி 25 வருடம் தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறக்கிறார் என்றால் பல நல்ல தரமான பண்புகள் அவரிடம் இருக்கும் என்பதில் மாற்றம் இல்லை. அதனை பலர் வெளியே கூறவும் கேட்டிருப்போம். தற்போது அதனை பாலிவுட் பட கோரியோகிராபர் ஃபரா கான் கூறியுள்ளார்.

விஜய் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த படம் நண்பன். இந்த படம் பாலிவுட்டில் அமீர் கான் நடித்த 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக் ஆகும்.தமிழின் நண்பனாக வெளிவந்த இந்த படம் நல்ல ஹிட் ஆகியது. அந்த படத்தில் ஒல்லி பெல்லி பாடலுக்கு நடனம் இயக்கியது ஃபரா கான் தான்.

இவர், தளபதி விஜய் எப்போதும் படத்தின் செட்டிற்கு சரியான நேரத்தில் வந்துவிடுவார். அவரது பிக் அப் டைமிங் செம்மையாக இருக்கும். அவரை பிடிக்கவே முடியாது. பாலிவுட்டின் இளம் நடிகர்கள் இவரை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும, என தளபதியை புகழ்ந்துள்ளார்.