Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
BiggBoss 20
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.08.31பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

பிக் பாஸ் சீசன் 8, போட்டியாளராக செல்கிறாரா சிறைக்கு சென்று வந்த இந்த பிரபலம்

எழுதியவர்subhashini31 ஆகஸ்ட், 2024 அன்று 11:46 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:36 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் 'பிக் பாஸ் சீசன் 8' நிகழ்ச்சி குறித்த புதிய அப்டேட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த சில வாரங்களாகவே பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி குறித்த செய்தி தான் அதிகமாக இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. பிரம்மாண்டமாக விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இதுவரை ஏழு சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது.

பிக் பாஸ் சீசன் 8, போட்டியாளராக செல்கிறாரா சிறைக்கு சென்று வந்த இந்த பிரபலம்

இந்த ஏழு சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கியிருந்தார். இந்த நிகழ்ச்சி பல பேரின் கேரியருக்கு துணையாகவும், பலரின் வாழ்க்கையையும் மாற்றி இருக்கிறது. இந்த நிகழ்ச்சி எந்த அளவுக்கு பிரபலமோ அந்த அளவுக்கு பிக் பாஸ் வீடும் பிரபலம் தான். இந்த பிக் பாஸ் வீட்டை பார்ப்பதற்காகவே நிகழ்ச்சியை பார்க்கும் ஒரு கூட்டம் இருக்கிறது. மேலும், கடந்த ஏழு சீசன்களாக தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்து இருந்தார்.

பிக் பாஸ் சீசன் 8:

இது பலருக்கும் அதிர்ச்சி தான். இதை அடுத்து யார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்கள்? என்ற கேள்வி எழுந்தது. இது ஒரு பக்கம் இருக்க, போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கும் வேலைகளும் செய்து வருகிறார்கள். இந்த நிகழ்ச்சிக்காக சினிமா பிரபலங்கள், சின்னத்திரை நட்சத்திரங்கள், சாதாரண மக்கள் என எல்லா தரப்பில் இருந்தும் சில பேரை தேர்ந்தெடுத்து அவர்களிடம் விஜய் டிவி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். வருகிற அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இருந்து பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிகழ்ச்சி குறித்த தகவல்:

மேலும், இந்த சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் பட்டியல் சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதில், மாகாபா ஆனந்த், பூனம் பஜ்வா, நடிகர் ரஞ்சித், ஜோயா, குரேஷி, அருண் பாரதி, ஜெகன், டிடிஎஃப் வாசன், ரியாஸ் கான், பிரீத்தி முகுந்தன் என்று பல பெயர்கள் இடம் பெற்று இருக்கிறது. இதில் யாரெல்லாம் நிகழ்ச்சியில் செல்வார்கள் என்று தெரியவில்லை. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.

பிக் பாஸ் சீசன் 8, போட்டியாளராக செல்கிறாரா சிறைக்கு சென்று வந்த இந்த பிரபலம்

நிகழ்ச்சி தொகுப்பாளர் அப்டேட்:

மேலும், பிக் பாஸ் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்க இருக்கிறார். நேற்று தான் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் புரோமோ சூட் பாண்டிச்சேரியில் நடத்தி இருக்கிறார்கள். விரைவிலேயே இது தொடர்பான ப்ரோமோவும் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதை விஜய் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் தற்போது பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் பிக் பாஸ் ரிவியூவர், தயாரிப்பாளரும், நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தர் சந்திரசேகரன் கலந்து கொள்ள இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பிக் பாஸ் சீசன் 8, போட்டியாளராக செல்கிறாரா சிறைக்கு சென்று வந்த இந்த பிரபலம்

ரவீந்தர் சந்திரசேகரன் குறித்த தகவல்:

காரணம், ஒவ்வொரு வருடமும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப் போகிறது என்றாலே போதும் ரிவியூ தொடங்கி விடுவார். ஒவ்வொரு போட்டியாளர்கள் உடைய குறைகளை கண்டுபிடித்து கமெண்ட் செய்து பெரிய வாதத்தையே ஏற்படுத்துவார். இதனாலே இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார் என்று சொல்லலாம். குறிப்பாக, வனிதா, அனிதா சம்பத் போன்ற போட்டியாளர்களை பற்றி இவர் பேசியிருந்தது மிகப்பெரிய அளவில் வைரலாகி இருந்தது. அதற்குப் பின் இவர் நடிகை மகாலட்சுமியை இரண்டாவது திருமணம் செய்தது அதிகமாக பேசப்பட்டது. அதனை எடுத்து இவர் பணம் மோசடி புகாரில் கைது செய்து ஜெயிலுக்கு போய் இருந்த விவகாரம் அனைவருக்கும் அறிந்ததே. இப்படி சோசியல் மீடியாவில் சர்ச்சை நாயகனாக இருக்கும் ரவிந்தர் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து இருப்பதாக கூறப்படுவது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தலைப்புகள்
#big boss 8#பிக் பாஸ்#ரவீந்தர்#பிக் பாஸ் 8#Ravindar
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement