எப்படி இருக்கிறது விஷ்ணு விஷாலின் ‘எஃப்.ஐ.ஆர்’ – முழு விமர்சனம் இதோ.

0
687
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள எப்ஐஆர் படம் இன்று வெளியாகியுள்ளது. ‘எஃப்.ஐ.ஆர்’ என்றால் ‘ஃபைசல் இப்ராஹிம் ரய்ஸ்’ என்று அர்த்தம் என்று கூறப்படுகிறது. இந்த படத்தினை கௌதம் மேனனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த மனு ஆனந்த் என்பவர் இயக்கி இருக்கிறார். இப்படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய மூவரும் ஹீரோயின்களாக நடித்து உள்ளனர். இவர்களுடன் படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். நீண்ட எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியுள்ள எப்ஐஆர் படம் வெற்றி அடைந்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

ஐஐடியில் படித்து முடித்து கோல்டு மெடல் வாங்கிய வேலையில்லா இளைஞனாக விஷ்ணு விஷால் நடித்திருக்கிறார். அபூபக்கர் அப்துல்லா என்ற பயங்கரவாதி ஒருவர் உலா வருகிறார். இவன் இலங்கையிலுள்ள தலைநகர் கொழும்புவில் 8 இடங்களில் குண்டு வைக்கிறான். இதனால் மிகப்பெரிய விளைவு ஏற்படுகிறது. இதனால் உளவுத்துறை அவரை தேடி வருகிறது. ஆனால், எதிர்பாராதவிதமாக இவர்களிடம் விஷ்ணு விஷால் சிக்கி கொள்கிறார். இவர் முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவர். பிறகு விஷ்ணு விஷால் தான் உளவுத்துறை என்று தீவிரவாதிகளுக்கு தெரிய வருகிறது.

- Advertisement -

அதற்குப் பிறகு விஷ்ணு விஷால் அவர்களிடமிருந்து எப்படி தப்பிக்கிறார்? இந்த பிரச்சினையை எப்படி எதிர்கொள்கிறார்? அபூபக்கர் அப்துல்லா பிடிபட்டாரா? என்பதே படத்தின் மீதி கதை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஷ்ணு விஷால் திரைப் பயணத்தில் முக்கிய படமாக எஃப்.ஐ.ஆர் அமைந்திருக்கிறது. அந்த அளவிற்கு படத்தில் விஷ்ணு விஷால் சிறப்பாக நடித்திருக்கிறார். ஆக்ஷன், காதல், தோல்வி, பாசம் என அனைத்தையும் விஷ்ணு விஷால் ஸ்கோர் செய்துள்ளார். இவருக்கு பிறகு படத்தில் ரைசா வில்லன் நடிப்பு இதற்கு முன் நடித்த படங்களை விட அருமையாக உள்ளது.

மேலும், மஞ்சுமா, கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் தங்களுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு பலம் சேர்த்துள்ளனர். படத்தின் பின்னணி இசை எல்லாம் பக்க பலமாக அமைந்துள்ளது. அதேபோல் அருள் வின்சென்ட் அவர்களின் ஒளிப்பதிவு காட்சிகளும் பிரமிக்க வைத்திருக்கிறது. மேலும், இந்த படத்தின் மூலம் மனு ஆனந்த் இயக்குனராக அறிமுகமானார். இருந்தாலும் இந்த படத்தின் மூலம் மனு அறிமுக இயக்குனர் என்று சொல்ல முடியாத அளவிற்கு நேர்த்தியாக கதையை கொண்டு சென்றிருக்கிறார்.

-விளம்பரம்-

படத்தில் தீவிரவாதத்தை பற்றியும் அப்பாவி இஸ்லாமியர்கள் மீது தீவிரவாத சாயத்தை பூசுவது பற்றியும் இப்படம் பேசியுள்ளது. இந்த படத்தின் கதை களமும், கொண்டு சென்ற விதமும் அருமையாக அமைந்து இருக்கிறது. நாட்டிற்கு சர்ச்சையான கதையை மிகவும் நேர்த்தியாக எந்த இடத்திலும் பிரச்சனை கலவரம் வராத அளவிற்கு இயக்குனர் கையாண்டிருப்பது பாராட்டுக்குரிய ஒன்று. அதுமட்டுமில்லாமல் முதல் படத்திலேயே சர்ச்சையான விஷயத்தை கையில் எடுத்து அதை சாதனையையும் செய்து இருக்கிறார் இயக்குனர். மேலும் புரியாத மக்களுக்கும் புரியும் வகையில் எளிமையாகவும் ரசிக்கும் படியும் படம் உள்ளது. இந்த படம் ஆக்ஷன், த்ரில்லர் படங்களை விரும்புவோருக்கு மட்டுமில்லாமல் அனைத்து விதமான ரசிகர்களும் ரசிக்கும்படியாக அமைந்திருக்கிறது.

நிறைகள் :

படத்தில் ஒவ்வொரு நடிகர்களும் தங்களுடைய அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஷ்ணு விஷாலின் நடிப்பு வேற லெவல் என்று சொல்லலாம். அது மட்டுமில்லாமல் விஷ்ணு விஷாலின் திரைப்பயணத்தில் இந்த படம் ஒரு மைல் கல்லாக அமைந்து இருக்கிறது.

படத்திற்கு ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் எல்லாம் பக்க பலமாக அமைந்துள்ளது.

கதைக்களமும் திரையை கொண்டு சென்ற விதமும் அருமையாக அமைந்து இருக்கிறது.

வழக்கமான ஆக்ஷன் திரில்லர் பாணியில் இல்லாமல் வித்தியாசமாக இயக்குனர் கையாண்டிருக்கிறார்.

அறிமுக இயக்குனர் என்று சொல்லும் படி இல்லாமல் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர்.

தீவிரவாதத்தை பற்றியும் அப்பாவி இஸ்லாமியர்கள் மீது தீவிரவாத சாயத்தை பூசுவது பற்றியும் படத்தில் பேசப்பட்டுள்ளது.

குறைகள் :

படத்தில் வழக்கமான சில லாஜிக் தவறுகள் தான் தவிர மற்றபடி சொல்லிக்கொள்ளும் அளவிற்கு குறைகள் எதுவும் இல்லை.

நடிகர் விஷ்ணு விஷாலின் திரைப்பயணத்தில் எஃப்ஐஆர் படம் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது. நீண்ட நாட்களாக காத்திருந்த ரசிகர்களின் எதிர்பார்ப்பை எஃப்ஐஆர் பூர்த்தி செய்திருக்கிறது.

மொத்தத்தில் எஃப்ஐஆர்- தோல்வி அடையவில்லை

Advertisement