மருமகளை தொடர்ந்து கோவில் சர்ச்சையில் சிக்கிய மாமனார் – திருப்பதியில் வழக்கு பதிவு, அப்படி என்ன சொன்னார் பாருங்க.

0
4660
sivakumar
- Advertisement -

ஒரு காலத்தில் தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக கொடி கட்டி பறந்தவர் நடிகர் சிவகுமார். இவர் எம் ஜி ஆர் ,சிவாஜி காலகட்டம் தொடங்கி தற்போது வரை தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். நடிகர் சிவகுமார் என்றாலே அவரது அமைதியான குணமும், அறிவுரையான பேச்சுகளும் தான் நம் நினைவிற்கு வரும். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக திகழ்ந்து கொண்டிருக்கும் சூர்யா, கார்த்திக் இவருடைய மகன்கள் ஆவார். இவர் நடிகர் மட்டுமல்லாமல் சிறந்த மேடைப் பேச்சாளரும் ஆவார்.

-விளம்பரம்-

இந்நிலையில் நடிகர் சிவகுமார் அவர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தவறுகள் நடைபெறுவதாகவும் அங்கு பக்தர்கள் செல்ல வேண்டாம் என்றும் பேசி உள்ளார். இப்படி இவர் பேசிய வீடியோ குறித்து தமிழ் மாயன் என்பவர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஈமெயில் மூலம் தகவல் அனுப்பியுள்ளார்.

- Advertisement -

மேலும், தமிழ் மாயன் அளித்த தகவலின் அடிப்படையில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் திருப்பதி மலையில் உள்ள இரண்டாவது நகர காவல் நிலையத்தில் நடிகர் சிவக்குமார் மீது புகார் அளித்து உள்ளது. பின் தேவஸ்தானம் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சமிப்பதில் கூட தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையும், சூர்யா மனைவியும், சிவகுமாரின் மருமகளும் ஆன நடிகை ஜோதிகா அவர்கள் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் குறித்து பேசிய வீடியோ சமூகவலைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதோடு ஜோதிகாவின் கருத்துக்கு பலர் ஆதரவாகவும், சிலர் எதிராகவும் குரல்கள் எழுப்பின.

-விளம்பரம்-
Advertisement