தமிழில் முன்னணி நடிகராக விளங்கி வரும் நடைகர் விஜய் சேதுபதி தற்போது தெலுங்கிலும் கால் பதித்துள்ளார். தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, ‘சயீரா நரசிம்ம ரெட்டி’ என்ற வரலாற்றுப் படத்தில் நடித்துவருகிறார். இந்த படம் பாகுபலிக்கு பிறகு டோலிவுட்டின் பிரமாண்டமான வரலாற்றுப் படமாகக் கருதப்படுகிறது.
https://twitter.com/FilterKaapiLive/status/1124172969972944896
கடந்த ஒரு மாத காலமாக சிரஞ்சீவி வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருப்பதால் சயீரா நரசிம்ம ரெட்டி படத்தின் படப்பிடிப்பு நடத்தப்படாமல் இருந்தது. சிரஞ்சீவி திரும்பியதால் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டது. இன்று காலை திடீர் என்று படப்பிடிப்பு நடந்து வரும் படப்பிடிப்புத் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
இதனால் அங்கிருந்தவர்கள் பதறியடித்து வெளியில் ஓடியுள்ளனர். தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.தீ விபத்துக்கான காரணம் மற்றும் உயிர்ச்சேதம் குறித்து அறியப்படாத நிலையில், காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.





