13 மொழிகளில் ரீமேக் ஆன ஒரே தமிழ்படம். அதுவும் பிரபு படம்னா நம்ப முடியுதா?

0
8277
prabhu
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான முன்னணி நடிகராக திகழ்ந்தவர் பிரபு. இவர் நடிப்பில் திலகமாய் இருந்த சிவாஜி கணேசனின் மகன் ஆவார். இவர் 1982ம் ஆண்டு சங்கிலி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளது. இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். பிரபு தன்னுடைய தந்தை சிவாஜி கணேசன் அளவுக்கு சினிமா உலகில் பெயரும், புகழும் வாங்கவில்லை என்றாலும் சினிமா உலகில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்று உள்ளார்.

-விளம்பரம்-

இந்நிலையில் நடிகர் பிரபு நடித்த படம் ஒன்று 13 மொழிகளில் ரீமேக்காகி உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. அந்த படம் 2002 ஆம் ஆண்டு ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் வெளிவந்த சார்லி சாப்ளின் படம். இந்த படத்தில் பிரபு, பிரபு தேவா, அபிராமி, காயத்ரி உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.

- Advertisement -

இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத்தந்தது. மேலும், தமிழ் சினிமாவில் அதிக மொழிகளில் ரீமேக் ஆன படமாகவும் இது கருதப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தை 13 மொழிகளில் ரீமேக் செய்து அனைத்து மொழிகளிலும் வந்தும் இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து உள்ளது. இதை இந்த படத்தின் இயக்குனர் சக்தி சிதம்பரம் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Charlie Chaplin - Tamil Movie Review

மேலும், சமீபத்தில் தான் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளிவந்திருந்தது. இதில் பிரபுதேவா நடித்து இருந்தார். ஆனால், இந்த படம் முதல் பாகத்தை போல் பெரிய அளவு வெற்றியை கொடுக்கவில்லை. இது குறித்து சோசியல் மீடியாவில் பல விமர்சனங்கள் எழுந்து உள்ளது.

-விளம்பரம்-
Advertisement