முதன் முறையாக ஆபாச போஸ்டர் சர்ச்சையில் சிக்கிய விஜய் சேதுபதி.! படக்குழு செய்த மோசமான செயல்.!

0
1086
Vijay-sethupathy
- Advertisement -

தமிழ் சினிமாவில் எந்த நடிகரின் ரசிகராக இருந்தாலும் விஜய் சேதுபதியின் நடிப்பை பிடிக்காதவர்கள் என்று யாரும் இருக்கமாட்டார்கள். விஜய் சேதுபதி அழுத்தமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இதனால் அவரது படங்கள் தயாரிப்பாளர்கள் கையை சுடாமல் லாபம் பார்த்து கொடுக்கின்றன.

-விளம்பரம்-

அதே போல நடிகர் விஜய் சேதுபதி படத்தில் பெரிதாக ஆபாச கட்சியோ முகம் சுளிக்கும் வகையில் வசனமோ இடம்பெற்றது இல்லை. மேலும், நடிப்பையும் தாண்டி விஜய் சேதுபதி தனிப்பட்ட வாழ்க்கையிலும் மிகவும் நல்லவர் என்ற முத்திரையை கொண்டுள்ளார்.

- Advertisement -

ஆனால், இந்த அணைத்து பெயரையும் அழிப்பது போல வந்துள்ளது விஜய் சேதுபதியின் வெளியிட்ட புதிய படத்தின் போஸ்டர். ஆனந்தராஜ் இயக்கத்தில் ‘கடல போட ஒரு பொண்ணு வேணும்’என்ற படம் உருவாகிறது. இந்தப் படத்தில் பிரபல டிவி தொகுப்பாளர் அஸார் ஹீரோவாகவும், மனீஷா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் போஸ்டரை விஜய் சேதிபதி தான் வெளியிட்டிடுந்தார். இந்நிலையில் காதலர் தினமான இன்று
இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் சென்னை முழுக்க போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் படத்தின் பாதி டைட்டில் அச்சடிக்கப்பட்டுள்ளது. அந்த விளம்பர பேனர்கள் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக இரட்டை அர்த்த வசனங்களுடன் அமைக்கப்பட்டிருந்தது. இதனால் இந்த போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதியின் பெயரை படகுழுவினர் கெடுத்துள்ளனர் என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகிறது.

-விளம்பரம்-
Advertisement