தாடையை உடைத்த தயாரிப்பாளர்..!கேப்டன் பட நாயகிக்கு நேர்ந்த அவல நிலை..!

0
143
Flora

கடந்த சில நாட்களாக கவிஞர் வைரமுத்து மீது பல்வேறு பாலியல் புகார்கள் வெளியாகியதை அடுத்து, பல பெண்களும் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து வெளிப்படையாக கூறி வருகின்றனர். ட்விட்டரி மற்றும் முகநூல் பக்கத்தில் #metoo என்ற ஹெஸ்டேக்கின் மூலம் பல்வேறு பிரபலங்களும் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து பேசி வருகின்றனர்.

Flora saini

தமிழை போன்றே இந்தி சினிமாவிலும் சில நாட்களுக்கு முன்னர் இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மீது பாலியல் குற்றச்சாட்டை #metoo ஹெஸ்டேக்கின் மூலம் பகிர்ந்திருந்தார் தற்போது மற்றும் ஒரு இந்தி நடிகையும் பாலியல் தொல்லையால் தாடை உடைந்த சம்பவம் குறித்து #metoo ஹெஸ்டேக்கில் பகிர்ந்துள்ளார்.

தெலுங்கில் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான “பிரேமா கோசம்” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை புளோரா இவருக்கும் ஆஷா சைனி என்ற இன்னொரு பெயரும் இருக்கிறது. தமிழில் கடந்த 2004 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான “கஜேந்திரா ” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் தமிழில் “குஸ்தி, குசேலன், திண்டுக்கல் சாரதி” போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் நடிகை புளோரா, தனது முகநூல் பக்கத்தில் முகத்தில் காயங்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். மேலும் , அந்த புகைப்படத்திற்கு கீழே, இது நான் தான, கடந்த 2007-ஆம் ஆண்டு காதலர் தினத்தன்று நான் காதலித்த பிரபல தயரிப்பாளர் கவுரங் தோஷியுடன் டேட்டிங் சென்ற போது என்னை கடுமையாக தாக்கினார்.

கவுரங் தோஷி:

Gaurang

ஒரு வருடம் தொடர்ந்து எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். நான் எந்த தவறும் செய்யவில்லை. ஆனாலும் என்னை அடித்து சித்ரவதை செய்தார். அவர் என்னை தாக்கியதில் என் தாடை எலும்பு உடைந்து போனது. நான் இத்தனை நான் என்னுடைய கேரியர் பாதிக்கப்படும் என்று தான் வெளியில் சொல்லாமல் இருந்தேன். ஆனால், அவர் என்னை புதிய படங்களில் ஒப்பந்தம் செய்யவும் மறுத்தனர். இதனால் மனம் உடைந்து போனேன் என்று கூறியுள்ளார்.